அரசியல், அரசியல்
பலமும் பயனும் அடைந்தால் பிரபலம்,
பணமும் பதவியும் இணைந்தால் பலாத்காரம்,
ஆணவம் கொண்டால் அட்டூழியம்,
அரசியல் என்பதே கொள்ளைக் கூட்டம்.
உண்மை என்பது எங்கும் இல்லை,
ஊழியம் என்பது சொல்லில் மட்டும்,
ஊருக்கு உபதேசம் உதவாத வாய் பேச்சு,
சுரண்டித் திண்பதே உடல் உழைப்பு.
நாளும் நடப்பது நாடகமே,
காண்பவர் கண்ணில் எல்லாம் நயவஞ்சகம்,
காத்திருப்பது கழுத்தருக்கவே,
அரசியல் என்பது என்றும் அவலமே.