சௌந்தர்ய லஹரி ----கவிராசபண்டிதர் செகவீரபாண்டியனார் பற்றி மருத்துவர் கன்னியப்பன் கட்டுரைத் தொகுப்பு

சௌந்தர்ய லஹரி

இந்நூல் இரண்டு பகுதியாக காணப்படுகிறது.

முதல் 41 பாடல்கள் முதற் பகுதியாகவும்
பின் வரும் 59 பாடல்கள் இரணடாம் பகுதியாகவும் கருதப்படுகின்றன.

முதற் பகுதிக்கு ஆனந்த லஹரீ என்றும்
இரண்டாம் பகுதிக்கு " சௌந்த்ர்ய லஹரீ " என்றும் பெயர் கூறுவர்.

இந்நூலின் இரண்டாம் பகுதியைச் சங்கராசாரியர் இயற்றினார் என்ற கருத்தும் நிலவுகிறது

இந்நூலைத் தமிழில் சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு
முன் வீரைக் கவிராஜ பண்டிதர் என்பவர் செய்யுள் வடிவிலேயே பாடியிருக்கிறார்.

இவர் வீரசோழ நல்லூர் என்ற ஊரைச் சர்ந்தவர் என்றும் இவரது பெயர் கரும்புச்சிலை வேள் (மதன வேள்?) என்றும் கவிராஜ
பண்டிதர் என்பது இவரின் கவி இயற்றும் ஆற்றலால் கிடைத்த பட்டப்பெயர் என்றும் பாயிரத்தின் வாயிலாக அறிகிறோம்.

கவிராச பண்டிதர் (10.3.1886 – 17.6.1967) எனப் போற்றப்பட்ட செகவீரபாண்டியனார் தென்னகத்தில், கோயில்பட்டிக்கும் திருநெல்வேலிக்கும் இடைப்பட்ட ஊர் மணியாச்சி. இவ்வூருக்கு அருகில் உள்ளது ஒட்டநத்தம். இதை "சின்னப் பாஞ்சாலங்குறிச்சி" என்றும் கூறுவர். இவ்வூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் வழிவந்த குடும்பத்தில் தோன்றிய பெருமாள்சாமி என்பவருக்கும் ஆவுடையம்மைக்கும் 10.3.1886 ல் பிறந்தவரே கவிராசபண்டிதர் செகவீரபாண்டியனார். 17.6.1967 ல் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு, மருத்துவம் பலனின்றி இறைவனடி சேர்ந்தார்.

செகவீர பாண்டியனார் தம் 27 ஆம் வயதில் வெள்ளைத்தாய் என்னும் மங்கையை வாழ்க்கைத் துணையாகக் கொண்டார். தென்பாண்டி நாட்டில் பல ஊர்களுக்கும் சென்று சொற்பொழிவு ஆற்றி வந்தார். ஆனாலும் இத்தகைய பேச்சுகள் பயனின்றிப் போகும் என்று உணர்ந்தவர், நூல் எழுதுவதே தக்க பணி என்று எண்ணினார்.

மதுரை மேலமாசி வீதியில் தங்கி, தாம் வசித்த இல்லத்திற்குத் "திருவள்ளுவர் நிலையம்" என்றும், தாம் தொடங்கிய அச்சகத்திற்கு ‘வாசுகி அச்சகம்’ என்றும் பெயரிட்டார். அச்சுக் கோர்ப்பது முதலான பணிகளைத் தாமே செய்தார். பாண்டியனார் கவி புனைவதில் வல்லவர்.

பெரும்பாலும் பாடல்கள் இயற்றும் புலவர்கள் அப்பாடல்களுக்கு உரை எழுதுவதில்லை; பின்னால் வரும் புலவர்களே எழுதியுள்ளனர். திருக்குறளுக்கு வள்ளுவர் உரை எழுதவில்லை.

கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார் 1330 குறட்பாக்களையும் வைத்து மேலே இரண்டடியில் திருக்குறளின் கருத்துகளுக்குப் பொருத்தமான சரிதங்களை இராமாயணம், பாரதம் போன்ற இதிகாசங்களிலிருந்தும், சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களிலிருந்தும் சேர்த்து, பொருத்தமான விரிவுரை (மாபாடியம்) செய்திருக்கிறார்.

கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார் 100 அதிகாரங்களில், அதிகாரத்திற்குப் 10 பாடல்கள் வீதம் தரும தீபிகை என்ற நூலும், 60 பாடல்கள் கொண்ட அணியறுபது என்ற நூலும், கம்பன் கலைநிலை என்ற உரைநடை நூலும் எழுதியிருக்கிறார்.

இவற்றை Tamil virtual library தளத்தில் தரவிறக்கம் செய்யலாம்.

எழுதியவர் : (27-Nov-17, 4:03 pm)
பார்வை : 204

மேலே