இதுவா சுதந்திரம்
பழமை வாய்ந்தும் பாரத நாட்டில்
வறுமை ஏனோ,வற்றலை மனிதா!
நீ விழித்துக் கொண்டே இருக்கும் போதும்
உரிமைகள் உனது,உறங்கியே கிடக்குது!
ஏழையின் வாழ்க்கை ,ஏமாற்றத்திலே முடியுது.
பணக்காரன் வாழ்க்கை, பன்மடங்கு உயருது.
அந்நியன் ஆட்சி முடிந்தது, அன்றே.
அடிமைத்தனம் ஏன், தொடருது இன்றும்.
அன்று வியர்வையும் ரத்தமும் ,தந்தது விடுதலை.
இன்று, வீதிக்குவீதி கொள்ளை,படுகொலை.
சட்டம்கூட கடமை தவறுதே.
சமூகத்தில் குற்றங்கள் குறைவின்றி நடக்குதே.
நீதி எங்கோ நின்று போனது.
நிம்மதி மனிதனை நினைக்கவே மறந்தது.
ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் அரசியல்,
அடித்தள மக்களின் தேவையை மறக்குதே!
வல்லரசாக வேண்டிய நாடு- இன்று
கருப்பு பணத்தால் ,கடன் வாங்கி நிக்குதே
எதற்கு வாங்கினோம், இந்த சுதந்திரம்
எதுவுமே மாறாமல்,இது தொடருதே நிரந்தரம்.......!!!