காகம் குயில் கோழி மனிதன்

காகம் கரைந்தால்
கடிதம் வருகிறது என்று பொருள் !
குயில் கூவினால்
வசந்தம் வந்து விட்டது என்று பொருள் !
கோழி கூவினால்
விடிந்து விட்டது என்று பொருள் !
அம்மா ஐயா தருமம்
என்று மனிதர்கள் கூவினால்
இந்த நாட்டில் வறுமை வாழ்ந்து
கொண்டிருக்கிறது என்று பொருள் !
வறுமையை ஒழித்து எல்லோரையும் செல்வந்தனாக்குகிறேன் என்று
அரசியல்வாதிகள் தேர்தலில் வாக்குறுதி அளித்ததால்
காதில் பூச் சுற்றுகிறார்கள் என்று பொருள் !

எழுதியவர் : கவின் சாரலன் (1-Dec-17, 9:12 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 111

மேலே