படமே ஒரு பாடம்

இளமையின் பிடியில்
முதுமையின் வாழ்வு !

பாசத்தின் பிணைப்பு
பார்வைக்கு சாட்சி !

தலைமுறை இடைவெளி
குறைந்தது இதயத்தால்
உணர்த்திடும் காட்சி !

பொறுப்பின் பொருளும்
புரிந்திடும் வண்ணம்
படமிதுவும் மாட்சி !

வளர்ந்திடும் பருவத்தில்
பிறந்திடும் உணர்வுகளே
தழைத்திடும் நெஞ்சில் !

முடியும் தறுவாயில்
மகிழ்வின் நுழைவாயில்
மழலையரின் உதவி !

சாய்ந்திடும் காலத்தில்
தாங்கிடும் விழுதுகளே
ஆலமரத்தின் ஆனந்தம் !

பயணிக்கும் படகுகளும்
சயனிக்கும் நதிக்கரையில்
பயணித்தக் களைப்புடன் !

ஓடியாடி உழைத்தவன்
ஓடாக தேய்வதும்
வாழ்வில் இயற்கை !

அலைந்து திரிந்தவன்
அயர்ந்து போவதும்
இறுதி வாழ்க்கை !

பெரியவர்க்கு உதவிடும்
இதயமுள்ள இளந்தளிருக்கு
தழைத்தோங்க வாழ்த்துகள் !


பழனி குமார்

​( படம் = தி ஹிந்து நாளிதழ் 3/12/2017 )

எழுதியவர் : பழனி குமார் (4-Dec-17, 12:23 pm)
Tanglish : padame oru paadam
பார்வை : 101

மேலே