குகை நமசிவாய சித்தர்-----------வெண்பாக்கள் தொகுப்பு

கன்னட நாட்டில், திருப்பருப்பதம் அல்லது மல்லிகார்ச்சுனம் என்ற ஊரில் சிவனது திருவருளைப் பெற்றுச் சிறப்புற்றிருந்த அன்பர் ஒருவர் இருந்தார். அந்த அடியவரிடம் அண்ணாமலையார் தோன்றி திருவண்ணாமலைக்குச் சென்று அங்கு ஞானகுருவாக எழுந்தருளி இருக்குமாறு கட்டளையிட்டார். அந்த அடியவர் பெயர் நமச்சிவாயர். உடனே நமச்சிவாயர் தென்திசை நோக்கிப் புறபட்டார். புறப்பட்டு வரும் வழியிலே உடன் வந்த அடியாருடன் ஓரூரை அடைந்தார்.

அவ்வூரில் ஒரு திருமணம் நடைப்பெற்றுக்கொண்டிருந்தது. அவ்வழியில், வந்த அடியாரை திருமண வீட்டிற்குரிய தலைவன், மாலை அணிவித்து வரவேற்று திருமண வீட்டிற்கு அழைத்துச் சென்றான். திருமண வீட்டாரும் அங்கு வந்திருந்தவரும், திருநீறு பெற்றுக் கொண்ட பின்,வீடு தீப்பற்றிக் கொண்டது. தீருநீறு அத்தகைய சக்தியும், அனலும் கொண்டது.

”இவ்வடியார் கொடுத்த திருநீற்றினால்தான் வீடு எரிந்து போயிற்று” என்றனர்.

அவர்கள் உரைத்தவற்றைக் கேட்ட அடியவர் சிந்தை நொந்து சிவபிரானை நினைந்து மீண்டும், எரிந்தவற்றை எல்லாம் படைத்தருளினார்.வெந்து போன்வெல்லாம் மீண்டும் உண்டான அருஞ்செயலைக் கண்டவர்கள், இந்த சிவனேயாவர் என்று போற்றினர். அங்கிருந்தவர் அனைவரும் அகம் மகிழ, ”நான் இனி ஒருவர் மனையிடத்தும் செல்லேன்” என்னும் ஒரு விரதத்தினை மேற்கொண்டு அவ்விடம் விட்டுப் புறப்பட்டார்.புறப்பட்ட நமச்சிவாயர் மாணவரோடும், அடியவரோடும் காலையில் பூவிருந்தவல்லி வந்து சேர்ந்தார். அவர்கள் அனைவரும் சிவபூசை செய்யும் பண்பினர். தலால், ஊரின் உள்ள தோட்டங்கள் எங்கும் உள்ள மலர்களை பறித்தனர்.அம்மலர்கள் அங்குள்ள கோயில் வழிபாட்டிற்குரிய மலர்கள். செய்தி அரசுக்கு எட்டியது. கவே, அவ்வூர் அரசு அலுவர்கள் நமச்சிவாயரை அழைத்து, ”உரியவை கேளாமல் தோட்டங்களில் புகுந்து கோயில் பூசைக்கும் மலரில்லாமல் பூக்களைப் பறித்தது குற்றமாகும்.. இதற்கு என்ன சொல்கிறீர்? ” என்றனர்.

அப்போது நமச்சிவாயர், தங்கள் மேல் குற்றம் சுமத்துவோரை நோக்கி, ”நாங்கள் பறித்த பூக்கள் எல்லாம் நீங்கள் சொல்லும் கோயிலில் உறையும் இறைவனுக்கே சார்த்தப் பெற்றன..அம்மலர்கள் வீணாக்கப் படவில்லை” என்றார். அதற்கு அவர்கள் ”கேட்ட கேள்விக்கு நேரான விடை சொல்லாமல் உயர்ந்த தத்துவம் பேசுகின்றீர்; உங்கள் சொந்தப் பூசையில் உங்கள் வழிபடு தெய்வத்திற்கு அணியப்பெற்ற பூக்களை இவ்வூர்க் கோயிலில் உறையும் இறைவன் ஏற்றுக்கொண்டான் என்று நீங்கள் சொல்வது உண்மையானால், இவ்வூர்க் கோயிலில் உள்ள சிவலிங்கத்திற்கு அணியப்பெற்றுள்ள மாலையானது அனைவரும் காணும்படி, உம் கழுத்திடம்வருதல் வேண்டும்” என்றார்.

அதற்கு நமச்சிவாய மூர்த்தி உடன்பட்டு சிவபிரானுடைய திருவடிகளைச் சிந்தித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் சிவபிரான் கோயிலில் உள்ள அருச்சகர்கள் இறைவனுக்குச் சார்த்தியுள்ள மாலையின் பின்புறத்தில் ஒரு கயிற்றினைக் கட்டி, ஒரு சிறுவனைச் சிவலிங்கத்தின் பின் புறமாக அமரச்செய்து, அக்கயிற்றைப் பிடித்துக் கொண்டிருக்குமாறு செய்தனர். நமச்சிவாயர் ”நற்றுணையாவது நமச்சிவாயவே” என்று பஞ்சாட்சரத்தை ஓதிக் கொண்டு இறைவன் முன்பாக நின்று கொண்டிருந்தார்.

அப்போது அனைவரும் காணச் சிறுவன் பிடித்திருந்த கயிறு அறுந்து மாலையானது நமச்சிவாயரின் கழுத்தில் மிளிர்ந்தது. கண்டவர் அனைவரும் வியப்புற்று நமச்சிவாயரைப் பெரிய ஞானியாராக ஏற்றுப் பாராட்டினர்.இந்நிலையில், அந்தப்பகுதியில் ட்சிசெய்த புறமதத்து அரசன், நமச்சிவாயாரையும் அவர் மாணவர்களையும் ழமாகச் சோதனை செய்து பார்க்க விரும்பினான். நமச்சிவாயரைப் பார்த்து, ”உங்கள் சைவ சமயம் உயர்ந்த தத்துவங்களைக் கொண்ட சமயம்,எல்லா வகையிலும் உயர்ந்து விளங்கும் சமயம் என்று உம் போன்றவர்கள் பேசப்படுவது உண்மையானால், நான் சொல்கின்றவாறு மெய்ப்பித்துக் காட்ட இயலுமா?” என்று கேட்டான்.”இறைவன் திருவருளைத் துணையாகக் கொண்டு உம் விருப்பம் போல் மெய்பிக்காட்ட இயலும்” என்றார். அரசன் நமச்சிவாயரை ”பழுக்கக் காய்ச்சிய இரும்பினை கையில் பற்றிக்கொண்டு, சைவ சமயமே சிறந்த; அச்சமயத்திற்குரிய தெய்வம் சிவபிரானே! என்று சொல்ல வேண்டும்,
அவ்வாறு செய்ய உம்மால் இயலுமா?” என்று கேட்டான். அப்போது நஅமச்சிவாய தேவர், ”பரம்பொருளாகிய சிவபிரானை உள்ளத்தே நினைந்துருகிச் சிவாபிரான் திருவருளைத் துணையாக கொண்டு அவ்வாறு செய்யக்கூடும்” என்று சொல்லித்
தம் மாணவராகிய விரூபாட்தித் தேவரை நோக்கினார். மாணவர் புரிந்து கொண்டார். புறமதத்தைச் சார்ந்த அரசன் விதித்த நிபந்தனைகட்கு உட்பட்டு இணங்கினார். உடனே அரசன் கட்டளைப்படி இரும்புத் துண்டம் ஒன்று நெருப்பிலிட்டு காய்ச்சப் பெற்றது.இரும்பு துண்டு சூடேறியதை விரூபாட்சித் தேவரிடம் தெரிவித்தனர்.

அப்போது விரூபாட்சித்தேவர், ”அந்த இரும்பு இப்போதுதான் பூத்திருக்கிறது; மேலும் பக்குவம் அடைய வேண்டும்” என்றார்.கொவ்வைக்கனியினும் மேலாக சிவந்தவுடன் விரூபாட்சித்தேவரிடம் தெரிவித்தார்கள். தீவண்ணராகிய சிவபெருமானை உள்ளத்தே நினைத்துக்கொண்டு, ”கையில் அனல் ஏந்தி விளையாடும் ஐயா போற்றி,
” செந்தழல் மேனிச் சிவனே போற்றி” என்றுசிவபிரானைச் சிந்தனை செய்து, பழுக்கக் காய்ச்சிய இரும்பைப் பார்த்துகொண்டே, ‘சைவ சமயமே சமயம், அச்சமயம் சார்ந்த சிவனே பரம்பொருள்” என்று உரைத்தருளினார்.

பிறகு, ”அரியும், அயனும், அமரும் அஞ்சியோடுதற்குக் காரண்மாயிருந்த லகால நஞ்சினை,அமுத திரள் எனக்கருதியுண்டு,அனைவருக்கும் அடைக்கலம் தந்து, நீலகண்டத்துடன் நிமிர்ந்து நின்ற சிவபிரானுக்கு அடியவராகிய எமக்குப் பழுக்கக் காய்ச்சிய இவ்விரும்பும் பழுத்ததொரு கனியேயாம்” என்று சொல்லிக்கொண்டே உட்கொண்டுவிட்டார். இந்நிகழ்ச்சிகளையும் நேரில் பார்த்துகொண்டிருந்த புறச்சமயத்தைச் சார்ந்த அரசனும்,அமைச்சரும்,மக்களும் வியப்படைந்து விதிர்விதிர்த்து நின்றனர்.பிறகு,வேற்று மதத்தினை சார்ந்த அம்மன்னன் நமச்சிவாயருக்கும் அவர் மாணவராகிய விரூபாட்சித் தேவர்க்கும், அவருடன் வந்த முன்னூறு அடியவர்க்கும் வேண்டிய சிறப்புகளை எல்லாம் செய்து பாராட்டினான்.

பிறகு, அங்கிருந்து புறப்பட்டு அடியவர்கள் சூழ்ந்து திருவண்ணாமலை சென்று சேர்ந்தார்.
திருக்கோயிலுக்குச் சென்ற போது, அண்ணாமலையாரைக் கைகூப்பி வணங்காமல். ”நீர் நலமாக இருக்கின்றீரோ?” என்று கையால் சைகையால் செய்து வந்தார்.நமச்சிவாய சுவாமிகள் செருக்கினால் அவ்வாறு செய்தார் அல்லர்; அவர்கள் பின்பற்றும் வீராகமம்,”அடியவர் சூழ குருமூர்த்தியாக வந்த சிவபிரான் கோலத்தையன்றிப் பிறரைக் கைகூப்பி வணங்குதல் கூடாது” எனக் கூறுவதனால் அவர் வணங்காமல் இருந்தார். ”குரு லிங்க சங்கமம் எனும் முப்பொருளையன்றிப்பிறரை வணங்குதல் கூடாது” என்னும் மரபினை ஒட்டி அவ்வாறு நடந்தார்.

”இலிங்கம் என்பது தம் மார்பகத்தே எழுந்தளியிருக்கும் சிவபெருமானே என்பது அவர்தம் கோட்பாடு’; அண்ணாமலையார் கட்டளைப்படியே தாம் அவ்வூர்க்கு வந்திருப்பதனை உணர்ந்தாரில்லை; என்றாலும் செந்தமிழ் மொழியில் அவர்க்குண்டான மேம்பட்ட தெளிவினால் அண்ணாமலையாரை சிறப்பித்து வெண்பாவினைப் பாடத்தொடங்கினார். கன்னட மொழியை அன்றி வேறு மொழியினை அறியாத நமசிவாயர் மேலான தமிழ்ப்புலவர்களும் பாராட்டத்தக்க வகையால் வெண்பாக்களைப்பாட அருள்செய்தார் சிவபிரான்.

‘நமச்சிவாயர் சிவபிரானிடம் சிறிதும் அன்பில்லாதவர் என்றும் மற்றவர்கள் கருதக்கூடிய வகையில் கைக்காட்டி வந்ததனை அறிந்த சிவாக்கிரயோகி என்பார், உடல் பெரிதும் வருந்துமாறு நமச்சிவாயரைப் பிரம்பினால் அடித்தார். ”நல்ல சற்குருவாக வந்து இறைவன் என்னை மோதியது கொல்வதற்காக அன்று; என்பாலுள்ள தீக்குணங்களைப் போக்குதற்கேயாம்” என்ற கருத்தமைய ஒரு வெண்பாவினை இயற்றினார், நமச்சிவாயர். நமச்சிவாயருடைய உயர்ந்த மனநிலையை உணர்ந்த சிவாக்கிரயோகியார் தாம் பிரம்பாலடித்தது பற்றி வருந்தினார்.

நமச்சிவாயர் அவ்விடத்தை விட்டு அகன்று, ”கோயிலுள் சென்று இறைவனை வணங்குதல் சிறந்தது.” என்று எண்ணினார்.அப்போது அவர்க்கு அருகிலே, முன்னொரு நாளில் தமக்கு மெய்ப்பொருள் உணர்த்திய சற்குருவானவர் கல்லாடையுடுத்த தொண்டர்கள் சூழ்தர முன்னே தோன்றினார்; தோன்றியவர் உரிமையுடன் இவரோடு சில பேசி அடியார் குழாத்துடன் கோயிலுக்குள் சென்றார்.

அதனைக் கண்ணுற்ற நமச்சிவாயர், ” குருமூர்த்தி எழுந்தருளியிருக்கும் இடம் இதுதான் போலும்” என்று கருதினார். அடியாருடன் சென்ற குருநாதர் தம்முடன் வந்த மாணவர்களோடு அண்ணாமலையார் அடிக்கமலங்களில் வீழ்ந்து பணிந்து எழுந்தார். அப்போது குருமூர்த்தியையும் உடன் வந்த அடியவரையும் கண்டிலர்
நமச்சிவாயர்.உடனே நமச்சிவாய மூர்த்தி ”இச்செயல் சிவபிரானுடைய அருட்செயலே”வம்பான சொற்களைக் கூறி வலக்கை தூக்கிச் சைகை செய்து வந்த நாம், சிவபிரானை உளமாரக் கைகூப்பி வணங்கவேண்டும் எனப்தற்காகவே சற்குரு நம்மை அடித்தார் என்று உணர்ந்து கொண்டார்.. நமச்சிவாயரைப் பிரம்பால் அடித்த யோகியும் நமச்சிவாயரும் சிவஞானம் கைகூடப் பெற்றமையால் ஒருவரை ஒருவர் காணும் இடங்களில் எல்லாம் அன்புற வணங்கி அளவளாவினர். உண்மை அடியாருடைய பண்பு இதுவென்று பிறர்க்கும் உணர்த்தினர்.

பழைய வழக்கத்தினை மாற்றிக்கொண்டு ஆலயத்துட் புகுந்து அண்ணாமலையாரை கைகூப்பி வணங்கும் வழக்கத்தினை மேற்கொண்ட நமச்சிவாரும், சிவாகமங்ககளை தெளிவாகக் கற்றுணர்ந்த சிவாக்கிரமயோகியும் அடியார்க்குரிய அனைத்துப் பண்புகளும் நிறைய பெற்று, முன்பிருந்த குறைகள் நீங்கப் பெற்று வழிபாடாற்றி வந்தனர். குறைகள் நீங்க பெற்று வழிபாடாற்றி வந்தனர். பின்பு அந்தச் சிவாக்கிரயோகி சென்ற இடம் தெரியவில்லை. நமச்சிவாய மூர்த்தி அண்ணாமலையிலேயே தங்கினார். அண்ணாமலையாரும் திருவுளம் மகிழ்ந்து நமச்சிவாயர் தம் உண்மை அடியார் என்பதனைப் பலவகையாக உலகிற்கு
உணர்த்தியருளினார்.

ஊரினிடத்தும் நாட்டின் கண்ணும் உலாவிக் கொண்டிருந்த நமச்சிவாயரைப் பெரிய மலையிடத்தே வசிக்குமாறு இறைவன் அருள் புரிந்தமையால் குகை நமச்சிவாயன் என்ற பெயர் எங்கும் பரவிற்று. குகை நமச்சிவாயருக்கு வேண்டிய பொருள்கள் அனைத்தும் யாரவது வாயிலாக கிடைக்கும்படி அண்ணாமலையார் அருள் புரிந்தார்.

இந்தக் குகை நமச்சிவாயருக்கு தகுதி நிறைந்த சீடர் ஒருவர் இருந்தார். அந்த சீடர் ஒருநாள் குகைநமச்சிவாயர் தன் திருவடிகளைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தபோது, டையை அச்சத்துடன் பிடித்துக் கசக்கினர். அதனைக் கண்ட குகை நமச்சிவாயர் ” ஏன் இவ்வாறு செய்தனை?” என்று கேட்டார். அதற்கு அந்த சீடர், ”தில்லை மாநகரிலே திருச்சிற்றம்பலத்திலே தொங்கவிடப்பட்டிருந்த திரைச் சீலையிலே தீப்பற்றியது. அத் தீயை அகற்ற கசக்கினேன்” என்றார். அப்போது குகை நமச்சிவாயர் தம் அருகிலிருந்த சீடனைக் கட்டித்தழுவி ” எனக்குக் குருவாகக் கூடிய பெருமையை பெற்றார்!” என்று பாராட்டினார். அன்று முதல் அவருக்குக் குரு நமச்சிவாய மூர்த்தி என்ற பெயரே வழங்குவதாயிற்று.

ஒருநாள் குகை நமச்சிவாய சுவாமிகள் சீடராகிய குரு நமச்சிவாயரை பார்த்து, ”நாம் இருவரும் ஓர் ஊரில் இருப்பது ஒரு மரத்தில் இரண்டு யானையைக் கட்டி வைத்திருப்பது போன்றதாகும்; ஆகவே நீ தில்லை மாநகருக்குச் செல்க! என்று சொல்லி மகிழ்ச்சியுடன் அனுப்பினார்.

மல்லிகார்ச்சுனத்திலிருந்து இவருடன் வந்து, பூவிருந்தவல்லியில் குருவின் கட்டளைப்படி அருஞ்செயல் புரிந்த விரூபாட்சித்தேவர்,குருவின் குகைக்கு மேலே குகை அமைத்துக்கொண்டு,சிரியர்க்குப் பல பணிகளையும் செய்து கொண்டிருந்தார். ஒருநாள் அன்பர் பலருடன் தம் குகையில் அமர்ந்திருந்தபோது, அவருடைய திருமேனி மறைந்தது. அங்கு, விபூதிலிங்கம் தோன்றியது. அந்த லிங்கம் இன்றுவரை இருந்து வருகிறது.

ஒருநாள், ஓரிடையன் இறந்த சினையாட்டினைத் தாங்கி நின்று ”இந்த ட்டின் வயிற்றில் இரண்டு குட்டிகள் உள்ளன்;விருப்பம் உடையவர் விலைகொடுத்துப் பெற்றுக் கொள்க” என்று பலரும் அறிய உரைத்து நின்றான். அங்கு வந்தவருள் ஒரு தீயவன் இடையனை நோக்கி,” இந்த மலையின்கண் உள்ள குகையிலே ஊன் அருந்துவதில் மிகுந்த இச்சையுடைவன் ஒருவன் இருக்கிறான்,அவனிடம் கொண்டுபோ; நல்ல விலைக்கு வாங்குவான்”என்றான்.

அவன் உரைத்தவற்றை மெய் என்று கருதிய இடையன் குகை நமச்சிவாய மூர்த்தியிடம் சென்று நிகழ்ந்தவற்றைக் கூறினான்.குகை நமச்சிவாய சுவாமிகள் சினங்கொள்ளாமல், ட்டின் விலை எவ்வளவு என்று கேட்டறிந்து விலைப் பொருளை நாளைத் தருகிறோம் சென்று வருக!” என்று அனுப்பிவிட்டார்.கருணைக் கடலாகிய அண்ணாமலையாரை நினைந்து பெருமானே இன்று ஏன் இறந்து போன ட்டினை என்னிடம் அனுப்பினீர்? என்று ஒரு இனிய பாடலை பாடி, திருநீற்றில் ஒரு துளியினை எடுத்து ட்டின் மேலிட்டார். உடனே டு உயிர் பெற்றெழுத்து இரண்டு குட்டிகளை ஈன்றது.இறைவன் திருவருளை நினைத்து மனம் உருகி நின்ற குகைநமச்சிவாயதேவர் புதர்களில் இருந்த தழைகளைக் கொய்து ட்டிற்குக் கொடுத்து மகிழ்ந்தார்.மறுநாள் அந்த இடையன் அவ்விடத்திற்கு வந்து,டு குட்டியுடன்
மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டான்; பெருமகிழ்ச்சி கொண்டு குகைநமச்சிவாய சுவாமிகளிடம் சென்றான்.

குகை நமச்சிவாய சுவாமிகளுடைய கட்டளைப்படி இடையன் பெருமகிழ்ச்சியுடன் ஆட்டினையும் குட்டிகளையும் கொண்டு சென்றான். இரண்டு குட்டிகளையும் இரண்டு தோள்களில் சுமந்துகொண்டு செல்லும்போது முன்னாள் உயிரிழந்து இடையனால் சுமந்துசெல்லப்பட்ட டானது இன்று கூவிக்கொண்டே பின்னே செல்லப்பட்ட டானது இன்று கூவிக்கொண்டேபின்னே செல்லத்தன் மனையைச் சார்ந்தான்.முன்நாள் இடையனைக் குகை நமச்சிவாயரிடம் அனுப்பிய வீணர்கள் இந்த அற்புத நிகழ்ச்சியைக் கண்டு, சுவாமிகளை இழிவுபடுத்துவதற்காக, உயிருள்ள ஒரு இளைஞனைப் பாடையில் வைத்துக் கட்டி, ”முனிவர் எழுப்பினாலும் எழாதே!”என்று பாடையில் வைக்கப் பெற்றவனிடம் சொல்லி வைத்து அவனைத் தூக்கிக்கொண்டு முனிவரிடம் சென்று, ”சுவாமி,நல்ல இளைஞன் ஒருவன் இறந்து போனான்; அவனை எழுப்பித்தந்தருளுக!” என்று வேண்டினர். வீணர்களுடைய பொய்ச்செயல்களைக் கண்ட குகை நமச்சிவாயமூர்த்தி, ”போனவன் போனவனே இனி அவன் எழான்” என்று சொல்லினார். உடனே பொய்யாகப் பிணம்போல் பாடையில் படுத்திருந்த இளைஞன் உயிர் பிரிந்துஎமபுரம் சென்றது.வீணர்கள் மனம் உடைந்து பெருந்துன்பத்திற்கு ளாயினர். இந்தஊரானது குறும்பர்கள் வாழும் ஊர்; கொன்றாலும் ஏன் என்று கேளாத ஊர்?

மிகக் கொடிய காளைகள் கதறும் ஊர்; பழியைச் சுமக்கும் ஊர்? தேளுக்கு ஒப்பான பாதகர்கள் வாழும் ஊர்” என்று சொல்லிய பின் ”என் சொல்லால் அழியப் போகிற ஊர்; என்று சொல்ல எண்ணினார்; அவ்வாறு சொல்லுதற்கு முன்னே தடங்கருணைப் பெருங்கடலாகிய அண்ணாமலைப் பெருமான் தோன்றி, ”அடே நான் ஒருவன் இந்த ஊரில்
இருக்கின்றேனடா” என்று திருவாய் மலர்ந்தருளினார். உடனே குகை நமச்சிவாயமூர்த்தி சினந்தணிந்து, கருத்தை மாற்றி. ”அழியாவூர் அண்ணாமலை என்று வெண்பாவை” முடித்தருளினார்.

‘‘கோளர் இருக்குமூர்,கொன்றாலும் கேளாவூர்
காளையரே நின்று கதறுமூர் – நாளும்
பழியே சுமக்குமூர், பாதகரே வாழுமூர்
அழியாவூ ரண்ணா மலை”

என்பது அவ்வெண்பா.

குகை நமச்சிவாயருக்குத் தொல்லை கொடுத்தவர்களைச் சார்ந்தவர் பலர் பல்வேறு இன்னல்களுக்கும் நோய்களுக்கும் உள்ளாகிப் பல்வேறிடங்களுக்கும் குடியேறிச் சென்றுவிட்டனர். சிலர் மட்டும், வாழ்ந்த ஊர் என்ற பாசத்தினால் அருணையிலேயே தங்கினார்கள்.ஒருநாள் ஓரிடையன் நூறு பசுக்களோடு மலைச்சாரலையடைந்தபோது, ஒரு பசுவை வேங்கை பற்றிக் கொண்டு ஓடிற்று.அந்த இடையன் விரைந்தோடிச்சென்று குகை நமச்சிவாயரிடம் சொல்லினான்.உடனே சுவாமிகள் அண்ணாமலை அண்ணலை நோக்கி ஒரு வெண்பாவைப் பாடினார்.அப்போது வேங்கை, தான் கவர்ந்து சென்ற பசுவைக் கொணர்ந்து வைத்துச்சென்றது.இந்த அருஞ்செயலைக் கண்ட இடையன் வியப்படைந்து எல்லோரிடமும் இதனை எடுத்துரைத்தான். கேட்டோ ர் அனைவரும் அண்ணாமலைப் பெருமான் அடியவர்களால் ஆகாதது ஒன்றும் இல்லை என்று பேசிக்கொண்டனர்.

பின்னர் ஒருநாள், ஒரு வைணவ குரு காஞ்சி மாநகரிலிருந்து புறப்பட்டு வடதிசை நோக்கிசென்று கொண்டிருந்தார். அப்போது கண்ணப்பன் கண்ணைப் பறித்து சிவபிரான் அருளைப் பெற்ற திருக்காளத்திமலை தோன்றியது. அதனையுணர்ந்த வைணவ குரு உடன் இருந்தவரை நோக்கி, ”இம்மலை என் கண்ணுக்குத் தெரியாமல் மறைப்பீராக! என்றார். அவர்களும் திரையிட்டு மறைத்தார்கள். இந்த நிகழ்ச்சி பல காத தூரத்தில் நடைபெற்றதென்றாலும், அண்ணாமலையில் குகைக்குள் இருந்த நமச்சிவாயர் ஞானநோக்கால் அறிந்து திடீரென நகைத்துக் கனல் பிழம்பு போன்ற கவியொன்றை இயற்றினார்.உடனே அந்த வைணவ குருவின் கண்கள் ஒளியிழந்தன். அந்த வைண குரு சில திங்கள் வரை அல்லலுற்று,பின்னர் அண்ணாமலையில் அமர்ந்திருக்கும் மாபெரு ஞானியாகிய குகை நமச்சிவாய தேவர் வாயிலாகத் தனக்குக் கிடைத்த தண்டனை என்று அறிந்ததும் அண்ணாமலைக்கு வந்து குகை நமச்சிவாயரிடம் அடைக்கலம் புகுந்தார். அப்போது குகை நமச்சிவாய தேவர் அந்த வைணவ குருவை நோக்கி, ”நீர் எந்த மலையைக் கண்ணாலும் பார்க்கக் கூடாதென்று திரையிட்டு மறைக்கக் கட்டளையிட்டீரோ அந்த மலைக்கே சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் திருக்காளத்தி இறைவனை வணங்குவீரானால் மீண்டும் கண் ஒளியைப் பெறுவீர்!” என்றார்.
அவரும் அவ்வாறே சென்று வணங்கி கண் ஒளியைப் பெற்றார்.

இவ்வாறாகவே, பல அருட்பெருஞ்செயல்களை செயல்களைச் செய்து அண்ணாமலையில்வாழ்ந்து வரும் நாளில், அண்ணாமலையாரிடம் தம்மிடம் ஈடுபாடுடைய மன்னன் ஒருவனைக் கொண்டு குகை நமச்சிவாயர்க்கு பொன்னும் மணியும் அணியும் பல்லாக்கும் அளித்துத்தனக்கு முன்னே செல்லுமாறு பணித்தருளினார்.

இந்த நிலையில் குகை நமச்சிவாயருக்கு வயது நூறு யிற்று. விதிக்கப்பெற்ற யுள் முடிந்த பின்னரும் இங்கிருந்தல் பிழையாகும் என்று சொல்லி முறைப்படி முன்பாகவே அமைக்கப் பெற்றிருந்த சமாதிக் குழியில் தாமே இறங்கினார். பரம்பொருளாகிய சிவபெருமான வானத்தில் இருந்து அசரீரியாக அங்கு வந்திருந்த பலரும் கேட்டுமாறு, ” அன்பனே! நீ இவ்வுலகில் மேற்கொண்டு நூறாண்டுகள் வாழ்வாயாக” என்றுரைத்தருளினார். இறைவன் திருவுளப் பாங்கினையுணர்ந்த குகை நமச்சிவாயர், அப்பெருமானைப் பாடி மகிழ்தார்.அவர் காலத்தில் வேற்று மதத்தினரால் சைவ சமயத்திற்கு வந்துற்ற இடையூறுகளை எல்லாம் நீக்கி சைவத்தின் சிறப்பினை நிலைநாடினார்.

ஒருநாள் குகை நமச்சியாவர், அண்ணாமலையார் சந்நிதிக்குச் சென்று வழிபாடு, செய்து கொண்டு தம்முடைய குகை நோக்கித் திரும்புகையில் ஒரு பெண் தன் கணவனை இழந்து கண்ணீர் சொரியக் கதறி அழுதுகொண்டு நமச்சிவாயா சுவாமிகள் விழுந்து வணங்கித் தன் கணவனை எழுப்பித் தருமாறு மன்றாடினாள். அந்தப் பெண்ணின் ஆற்றோணாத் துயரினைக்கண்ட சுவாமிகள் உள்ளம் உருகி, அண்ணாமலையாரை திருவடிகளை நினைந்து உருகி பாடினார். பிறகு, அந்தப் பெண்ணினை நோக்கிக் ”குழந்தாய்! அண்ணாமலையார் எனக்கு கூடுதலாக நூறு வயதினை தந்துள்ளார்; அந்த நூறு ஆண்டுகளுள் எழுபத்தைந்து ஆண்டுகளை உனக்கும் உன் கணவனுக்கும் தந்தேன், உன் கணவன் உயிர்ப் பெற்று எழுவான், வீடு நோக்கிச் செல்க!” என்றார். அந்தப்பெண் நம்பிக்கையுடன் வீட்டிற்குச் சென்றாள். கணவன் உயிர் பெற்று எழுந்தனைக் கண்டாள்; பெருமகிழ்ச்சிக் கொண்டாள். கணவனுடன் சென்று குகை நமச்சிவாய சுவாமிகளுடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கி,அவருடைய அருள் நோக்கத்தினைப் பெற்று வீடு திரும்பினாள். இவ்வாறாக குகை நமச்சிவாயர் அண்ணாமலையில் வாழ்ந்து வருங்காலத்தில் நகித் எனப் பெயர் கொண்ட மிலேச்ச மன்னன் ஒருவன் அண்ணாமலைக்கு வது சேர்ந்தான். அவன் மதங்கொண்ட யானையை போன்று காணபட்டான். அவன் அழகுமிக்க பெண்களைப் பல சாதிகளிலிருந்து வன்முறையில் கவர்ந்து காவலில் வைத்து அறநெறிக்கு மாறாக நடந்து வந்தான்.அவன் அழிவதற்குரிய காலம் வந்து விட்டபடியால், அண்ணமலையார் திருக்கோயிலுனுட் புகுந்து சில வருந்தத்தக்க செயல்களைச் செய்யத் தொடங்கினான்.

இவற்றை எல்லாம் கண்ணுற்ற குகை நமச்சிவாய சுவாமிகள்,” மூன்று சுடர்களையும் மூன்று கண்களாகக் கொண்ட சிவபிரானுடைய நெற்றிக்கண்ணும் ஆழ்ந்த உறக்கம் கொண்டுவிட்டதோ” என்ற கருத்தினை அமைத்துப் பாடினார். அன்றிரவில் அண்ணாமலைப் பெருமான் மிலேச்சன் கனவில் தவசியாகத் தோன்றி, ஒரு படையினால் முதுகிடத்தில் சிறிது குத்தினார். மிலேச்சன் விழித்து எழுந்தான்.முதுகில் ஏதோ ஒரு சிறிது ஊறல் தோன்றுவது போல் அவனுக்குத் தோன்றியது. பிறகு அவ்விடத்திலொரு வேர்க்குரு தோன்றியது. பின்னர் அவ்வேர்க்குரு முதுகுப் பிளவையாக உருக் கொண்டது. அதனிக் கண்ட மிலேச்சன் வருந்தினான்.

அவனுடன் வந்த சில பெரியவர்களிடம் அதனைக் கூறினான்.
” நீ இவ்வாலயத்திற்குள் இருத்தல் கூடாது” என்றவுடன் கோயிலை விட்டு வெளியேறினான். பிறகு அருச்சகர்கள் கோயிலைத் தூய்மை செய்து முறையாக வழிபாடு நடைபெறச் செய்தனர். பிறகு, அந்த மிலேச்சன் பிளவை நோண்டினால் சொல்லொணாத் துன்பமுற்றுப் புழுக்கள் பெருகிடத் தாங்கொணாதவனாகி, ஓரிரவில் துடிதுடித்து இறந்தான். இதனைக் கேள்வியுற்றமக்கள் பெருமகிழ்ச்சியுற்றனர். அவன் இறந்த தினத்தன்று மக்கள் அனைவரும், இராவணன் இரணியன் போன்றவர்கள் அழிந்த நாளில் உலகம் எவ்வாறு மகிழ்ந்ததோ அவ்வாறு மகிழ்ந்தனர்.

கருவுற்ற காலத்தில் விதிக்கப்பெற்ற நூறு வயதும் கழிந்தாற் போலவே, பிறகு சிவபிரான் அளித்த நூறு வயதும் கழிந்து போயினமை அறிந்து, தமக்குத் தலைவராயும்,தந்தை,தாய், தெய்வமாகவும் விளங்கும் திருமலையில் அன்று இயற்றப் பெற்ற குழியில்கண் புகுந்தார். புகுந்தவர், அங்கிருந்த அன்பர்களை நோக்கி, ”என்னை, இவ்வுடல் என்று நினையாதீர். இவ்வுடல் நான் அல்லேன்” என்று சொல்லிக்கொண்டே அருவம் ஆனார். பிறகு அங்கிருந்தவர்கள், அவ்விடத்தே இலிங்கம் அமைத்து வழிபாடாற்றினர்.

‘அண்ணாமலைக்கு வா‘வென்று அழைத்து ட்கொண்ட ஞான தபோதர் குகை நமச்சிவாயர் ஒரு சிவயோகியாக,சித்தராக சமாதி முக்தி அடைந்தார்.அவர் அண்ணாமலையில் ஒரு குகையில் சிவயோகத்தில் இருந்து வந்தமையால் குகை நமச்சியாவ மூர்த்தி எனக் கூறப்பட்டார்.

அவருக்கு நமச்சிவாயர் என்றொரு மாணவ சீடன் இருந்தார். அவர் ஞானாசிரியரின் அருகிலிருந்து அன்புடன் பணி செய்து வந்தார். குகை நமச்சிவாயர் குகையின் பக்கத்தில் வளர்ந்தோங்கி இருந்த ஆலமரத்தில் மரத்தில் ஊஞ்சலிட்டு அதில் யோக நித்திரை கொள்வது வழக்கம்.



ஒரு வளர்ந்தோங்கி ஆலமரம் கோயில் நுழைவாயிலிலும்,குகை நமச்சிவாயர் சமாதி அருகிலும் இருக்கிறது அதன்போது ஞானாசிரியன் அருகிலிருந்து பணி செய்து கொண்டு இருந்தார். அப்போது சிரியர் அருகில் இருந்தபோதும் ‘குலுக்’ என்று நகைத்தார். ”நமச்சிவாயம் என்ன அதிசயம் கண்டு நகைத்தாய்?” என்று குகை நமச்சிவாயர் கேட்டார்.அப்பொழுது மாணவ சீடராகி நமச்சிவாயர், ”ஐயனே திருவாரூரின் கண் தியாகராசப் பெருமானைத் திருவீதியின் கண் எழுந்தருளச் செய்து உலா வரும் போது, நாட்டியப் பெண்கள் டிக்கொண்டு வர, அவர்களுள் ஒருத்தி கால் இடறி விழுந்தாள்; அங்கிருந்த அவைவரும் நகைத்தார். யானும் நகைத்தேன்” என்றார் இதுபோன்று ஒருநாள் ஞானாசிரியரின் அருகில் இருந்தபோது,தம் டையைப் பற்றி தேய்த்தார்.”ஏன் இவ்வாறு ஆடையைப் பற்றித் தேய்த்தனை” என்று குகை நமச்சிவாயர் கேட்ட போது. ”பெருமானே! தில்லை மாநகரிலே பொற்சைபையிலே திரைச்சிலை இட்டிருந்தார்கள். அதன் அருகில் குத்துவிளக்கு சுடர் விட்டு எரிந்துகொண்டிருந்தது, அதனை ஓர் எலி பற்றி இழுத்துகொண்டு சென்றது, அச்சுடர் திரைசீலையில் பட்டதனால் அத்திரைச்சிலையில் தீப்பற்றிக்கொண்டது. அங்கிருந்தவர்கள் அத்தீப் பரவாமல் சீலையைப் பற்றிக் கசக்கினர், யானும் கசக்கினேன்” என்றார்.

பின்பு ஒருநாள் குகை நமச்சிவாயர் மாணவர் உள்ளத்தை அறியவும், சோதனை செய்யவும் தேர்ந்து அறியவேண்டி வாந்தி எடுத்து அதைத் திருவோட்டில் பிடித்து, ”இதை மனிதர் கால் அடிபடாத இடத்தில் இட்டுவருக” என்று கட்டளை இட்டார்.அதை நமச்சிவாயர் ஏற்றுக்கொண்டு மனிதர் உலவாத, கால் அடிப்படாத இடம் எதுவென ராய்ந்து பார்த்தார். அப்படி ஒரு இடம் இல்லை என்று அறிந்து, அதனை தாமே உட்கொண்டார்.

சிரியர் இந்த அருஞ்செயலைக் கண்ணுற்று, ”அன்பனே! அடிபடாத இடத்தில் வைத்தணையோ?” என்று கேட்டார். அதற்கு பதிலாக, ”அய்யனே, அதனை வைக்க வேண்டிய இடத்தில் வைத்தேன்…” என்று மிகவும் பணிவாக விடை அளித்தார்.

மாணவர் செய்த மூன்று அருஞ்செயல்களையும் கண்ட நமச்சிவாய மூர்த்தி, மாணவருடைய ஞான நிலை நாளுக்கு நாள் உயர்ந்து அறிந்து ”அவரை அவர்க்கேற்றதொரு புனிதமான இடத்திற்கு அனுப்பிவைத்தல் வேண்டும்”
என முடிவு செய்தார். உடனே ஒரு வெண்பாவில் பாதி வெண்பாவினைக் குகை நமச்சிவாயர் இயற்றி பாடினார்.
நேரிசை வெண்பா….”ஆல்பழுத்துப் பக்கியினுக் காகார மானதென
வேல் பழுத்து நின்றநிலை வீணிலெனச் ——– என்று பாடி நிறுத்தினார்.
அருகிலிருந்த குரு நமச்சிவாய மாணவ சீடன், ”சுவாமி! குறை வெண்பாவையும் முடிக்கலாமே” என்றார். அப்போது குகை நமச்சிவாயர். ”அப்பா நமச்சிவாயம்! எஞ்சியுள்ள அரை வெண்பாவையும் நீயே முடிப்பாயாக!” என்றார். ஆசிரியர் கூறியன கேட்டசீடன், ”பெருமானே! குருவின் வாக்கிற்கு அடாத எதிர்வாக்கினை அடியேன் கூறுதல் பொருந்தாதே” என்றார். அப்போது குரு ” நீ அருள்நிறை மாணவன், தாலால் எஞ்சிய வெண்பா அடிகளைப் பாடுக!” என்றார். அப்போது மாணவர், நல்லாசிரியன் கட்டளைக்கு கட்டுப்பட்டு,—–”சால்வன
செய்யா வொருத்தாருடன் சேர்ந்து மிருப்பீரோ வையா நமசிவா யா” — என்று முடித்தார்.

அருள்நிறை மாணவரைப்பற்றி அறிய வேண்டுவனவற்றை தெளிவாக அறிந்துகொண்ட ஞானாசிரியர், ”அப்பனே! நமசிவாயம்! உனக்கு ஒப்பான மாணவனை எங்கும் காண்டல் அரிது; கையால் இன்றுமுதல் நீ குரு நமச்சியாய மூர்த்தி எனத் திருப்பெயர் பெற்றாய்!” என்று தழுவிக்கொண்டு,”என் கண்ணுட் கருமணியே!” ஒரு கம்பத்தில் இரண்டு யானைகளைக்கட்டுதல் கூடாது;

ஆகையால் அறியாமையை நீக்கி அறவொளியை வழங்கும் அம்பலவாணர்
எழுந்தளிருயிருக்கும் திருத்தில்லை எனப்பெறும் சிதம்பரத்திற்குச் செல்க! அங்கு உம்மால் நடைபெற வேண்டிய பல திருப்பணிகள் உள்ளன” என்று கட்டளையிட்டார். அப்போது கரு நமச்சிவாயர் ஞானாசிரியரை நோக்கி, ”ஐயனே! ஞானாசிரியர் திருவடிகட்குப் பணி செய்யும் பேற்றினை இழந்து, நாள்தோறும் செய்யும் குரு தரிசனத்தை இழந்து வேறொரு நகர்க்கு எவ்வாறு செல்வேன்” என்றார்.

குகை நமச்சிவாயர் மாணவரை நோக்கி, ”நீர் பெருமான் எழுந்தளியிருக்கும் சிதம்பரத்திற்கு சென்று பொன்னம்பலத்தின் முன்னே நின்று கூத்தப்பெருமானை வணங்கி நிற்பீராக! அங்கே, அப்பெருமான் நம்மைபோல் தரிசனம் கொடுத்தால் இருப்பீராக; இன்றெல் இவ்விடம் வந்து சேர்க!” என்று சொல்ல.மாணவர்,”நன்று! என்று நவின்று பத்துப்பாடல்களால் ஆசிரியர்க்கு வணக்கம் தெரிவித்து நினறார். ஆசிரியரிடமிருந்து ”புறப்படலாம்” என்ற சொல் பிறந்தது. உடனே குரு நமச்சிவாயர் தனியாக சாயுங்கால் நேரத்தில் புறப்பட்டுக் கிழக்கு நோக்கி ஒரு காத தூரம் நடந்தார். இருள் வந்தது. அங்குதத் தகுதியானதொரு இடம் பார்த்து ஒரு லமரத்தின் கீழ் சிவயோகத்தில் அமர்ந்தார். பின் பசி மேலிட்டு, உண்ணாமுலை அம்மையாரை நோக்கி ஒரு வெண்பா பாடினார்.

”அண்ணா மலையா ரகத்துக் கினியாளே
உண்ணா முலையே உமையாளே- நண்ணா
நினைதொறும், போற்றிசெய நின்னடிய ருண்ண
மனை தொறும் சோறுகொண்டு வா…”

எனறு குரு நமச்சிவாய சுவாமிகள் இவ்வண்பாவினைப் பாடிய நேரத்தில், அண்ணாமலையாருக்குச் சர்க்கரைப் பொங்கல் செய்து பொன்தபாளத்தில் இட்டு நிவேதித்துக் கோயிலில் வைத்து அதனை எடுத்துச் செல்ல மறந்தவராய்க் காப்பிட்டு அர்ச்சகர் முதலியோர் அவரவர் வீடு சேர்ந்தனர்.அதனை அறிந்த உண்ணாமுலைத் தாயார் அந்நிவேதனத்தைத் தட்டுடன் கொண்டு வந்து குரு நமச்சிவாயமூர்த்திக்குக் கொடுத்துவிட்டு சென்றார்.

விடிந்தபின் அர்ச்சகர் முதலியோர், கோவிலுக்கு சென்று கதவைத் திறந்து பார்த்தபோது,பொற்றாம்பாளம் காணப்படவில்லை.அர்ச்சகர்களும், ஊரின் உள்ள பெரியோரும் திகைப்புற்று, ”யாரோ கள்வர்தாம் களவாடி இருக்கவேண்டும்” என்று கருதி ராய்ந்து பார்க்கலாயினர். இதனால் இருபது நாழிகை மட்டும் கோயில் பூசை நடைபெறாமல் இருந்தது. அப்போது அங்கிருந்த ஒரு அர்ச்சகர் சிறுவன் தெய்வமுற்று, ”நமச்சிவாயா மூர்த்தி சிதமபரத்திற்கு செல்லும் வழியில் ஒரு லமரத்தின் கீழ் இருக்கிறார். அவருக்கு உண்ணாமுலைத் தாயார் அமுது கொண்டு போய்க் கொடுத்தார். அங்கே தாம்பாளம் கிடக்கிறது எடுத்துக் கொண்டு வரவும்! என்றான்


அதனைக் கேட்ட அர்சசகர்களும் பிறரும் இறைவனை வாழ்த்தி அவ்விடம் சென்று தாம்பாளத்தைக் கண்டெடுத்துக் கொண்டு அண்ணாமலைக்கு வந்து சேர்ந்தனர். மறுநாள் பகலவன் தோற்றமாகும் போது குரு நமச்சிவாயர் எழுந்து தன் ஞானாசிரியைத் தொழுது கிழக்கு நோக்கிச் செல்லும்போது, இருடிவனம் என்பதொரு திரு நகரினைக் கண்டார்.அந்நகரினைக் கண்டார். அந்நகரில் அம்மையும்,அப்பனும் அர்த்தநாரீஸ்வர வடிவத்தில் எழுந்தருளியுள்ளனர். அவ்வடிவம் அகத்திய முனிவரால் பூசிக்கப் பெற்றதாகும். அங்கு ஐயாயிரம் கொண்டான் என்றொரு புனிதத் தீர்த்தம் உண்டு. அதில் நீராடி பூசை முடித்துத் தூயமனத்துடன் சுவாமியை துதித்துச் சிவயோகத்தில் இருக்கும்போது பசி வந்தது.அப்போது, அன்னை பராசக்தியை நோக்கி,

”தாயிருக்கப் பிள்ளை தளருமோ தாரணியில்
நீயிருக்க நான் தளர்தல் நீதியோ – வேயிருக்கும்
தோளியோ விண்ணோர் துதிக்கும் திருமுத்து
வாளியே சோறுகொண்டு வா”

என்று ஒருவெண்பாவினை இயற்றினார். அம்மை அதனைத் திருச்செவியில் ஏற்று ”குருநமச்சிவாயா! நான் இடப்பாகம் பிரியாமல் இருப்பவும் நீ என்னை பிரித்துப் பாடியது முறையோ? இப்போது உன் வாக்கினால் சேர்த்துப் பாட வேண்டும்” என்று கூற குருநமச்சிவாயா மூர்த்தி,

” மின்னும் படிவந்த மேக களத் தீசருடன்
மன்னும் திருமுத்து வாளியே – பொன்னின்
கவையாளே! தாயே! என் கன்மனத்தே நின்ற
மலையாளே சோறு கொண்டு வா”

என்று ஒரு வெண்பாவைவினால் சேர்த்துப் பாடினார்.உடனே அம்மையார் அமுதுகொண்டு வந்து கொடுத்தார். அதனை உட்கொண்டு புறப்பட்டு விருத்தாசலம் வந்து பழமலை நாதரையும் பெரியநாயகி அம்மையையும் வழிபட்டு ஒரு குளக்கரையில் சிவயோகத்திலிருக்கும் போது பசி அணுகிற்று. அப்போது,

”நன்றிபுனை யும் பெரிய நாயகியெ நுங்கிழத்தி
என்றும் சிவன்பா லிடக்கிழத்தி – நின்ற
நிலைக்கிழத்தி மேனிமுழு நீலக் கிழத்தி
மலைக்கிழத்தி சோறுகொண்டு வா…”

-என்ற வெண்பாவைப் பாடினார்.அம்மையார் தண்டூன்றி விருத்தாம்பிகையாய் வந்து, குரு நமச்சிவாயாரைப் பார்த்து, ”என்னப்பா! உன்னுடைய சொல்லினால் என்னைக் கிழத்தி கிழத்தி என்று பாடுதல் நலமா? கிழவிக்கு நடக்க இயலுமா? தண்ணீர் எடுக்க கூடுமோ? உகட்டுப்பட்டு, உணவு கொண்டு வர உடலில் உரம் இருக்குமோ? என்றார்.
உடனே, குரு நமச்சிவாய தேவர்
”அன்னையே! அண்ட கோடி ஈன்ற பின்னும் கன்னி என மறைபேசும் னந்த ரூப மயிலே!
பாலகாசியில் பாலாம்பிகை; இது விருத்தகாசி; நீர் பெரிய நாயகி; இங்குள்ள இங்குள்ள இறைவனும் பழமலை நாதர்; அதுபற்றியே யான் அவ்வாறு சொல்லினேன்” என்றார்.அடியவர் கூறியன கேட்ட அம்பிகை ” என் அருமை மகனே! நமச்சிவாயம்! உன்னுடைய இனிய வெண்பாவிலே என்னை இளமையாக வைத்துப் பாடுக!” என்றார். குரு நமச்சிவாய தேவர்
”கருணை கடலே! இரண்டு அம்மையார் க கூடுமே” என்று சொல்ல அம்மையார் ”அதனால் பிழை ஒன்றும் இல்லை பாடுக! என்றார். உடனே குரு நமச்சிவாயர் பின்வரும் வெண்பாவினைப் பாடி மகிழ்ந்தார்.

”முத்தநதி சூழும் முதுகுன் றுறைவானே
பத்தர் பணியும் பதத்தாளே!
அத்தர் இடம்தாளே மூவா முலைமேல் எழிலார
வடத்தாளே சோறுகொண்டு வா…”

இவ்வெண்பாவைச் சொல்லியவுடன் அம்மையார் பாலாம்பிகையாய்ச் சோறு கொண்டு வந்து கொடுத்தார். அதனையுட்கொண்டு வழிநடந்து புவனகிரிக்கு வந்து னந்தத் திருநடனம் புரியும் ஐயன் தில்லை அம்பலவாணப் பெருமான் எழுந்தளியிருக்கும் தில்லைத் திருக்கோயில் கோபுரம் கண்டு வணங்கி,

” கோபுரங்கள் நான்கினையும் கண்டமட்டில் குற்ற்மெலாம்
தீபரந்த பஞ்சதுபோல் சென்றதே – நூபுரங்கள்
ர்க்கின்ற செஞ்சரண அம்பலவா நின்பாதம்
பார்க்கின்றார்க் கென்ன பலன்…”

என்ற இவ்வெண்பாவைக் கூறிகொண்டே சிதம்பரம் சென்று திருக்கோயிலுட் புகுந்து, சிவகங்கையில் நீராடி,

”கண்டமட்டில் கண்ட வினை காதம்போம்
கையிலள்ளி கொண்டமட்டில் கொண்டவினை
வண்டமிழ்சேர் வாயார வேபுகழும் வண்ணச் சிவாமித்
தாயார் திருமஞ் சனம்….”

என்ற வெண்பாவினைச் சொல்லிக் கொண்டே கனக சபைக்கு முன்சென்று பெருமானை வணங்கும் போது, கூத்தப் பெருமான்,அண்ணாமலையில் குகைக்கண் அமர்ந்திருக்கும் குகை நமச்சிவாயரைப் போலவே காட்சி கொடுத்தார். அப்போது வாழ்த்தி வணங்கி நின்று, ”திருவண்ணா மலையிற் குகை நம சிவாய தேசிக வடிவமா யிருந்து

கரவனா மடியேன் சென்னிமே லுனது
கழலினை வைத்தவா நுறுரேன்
விரகின் நாரியரைப் புதல்வரை பொருளை
வேண்டிய வேண்டிய தனைத்தும்
பரவினார் புகழ்வார்க் களித்திடும் பொன்னம்
பலவனே பரமா சிரியனே…”

என்ற பாடலை முதலாக கொண்டு தொடங்கி, ஒரு நாழிகை அளவிற்குள் நின்ற இடத்திலேயே, உலகத்தை மறந்து நின்று, ”என்று வந்தாய் எனும் எம்பெருமான்’ என்ற திருக்குறிப்பில் ஒன்றி இருந்து நூறு பாடல்களைப் பாடினார். பிறகு ஓர் அறையில் அமர்ந்து சிவயோகத்தில் அமர்ந்தார். அந்நாளில் தில்லை மூவாயிரவருள், சீவன்மூத்தர், சடாமுத்தர்,மாகமுத்தர் என்ற மூவர் என்ற மட்டும் பல்லக்கேறும் தனிச்சிறப்புடையவர்களாக இருந்தனர். அவர்கள் கனவில் டல் அழகராகிய அம்பலவாணப் பெருமான் தோன்றி, ”திருவண்ணாமலையில் இருந்து ஞானி நம் திருநகரில் வந்து தங்கியிருக்கிறார்; அவர் சிவயோகத்தில் மிகுதியாக ஈடுபட்டிருப்பவர். அவருக்கு தனிமையான இடத்தினைத் தருதல் வேண்டும். அவரால் நமக்குப் பற்பல பணிகள் நடைபெற இருக்கினறன. அவருக்கு தகுதியான இடத்தினை தருதல் வேண்டும் நாம் இருமுறை திருவடி வைத்திருக்கின்றோம். அவ்விடத்தில் குரு நமச்சிவாயரைக் கொண்டு போய் விடுவீராக” என்று திருவாய் மலர்ந்தளினார். அவ்வாறே அர்ச்சகர் மூவரும் குரு நமச்சிவாயரை அவ்விடத்தில் கொண்டு போய் விட்டுத்திரும்பினர். அங்கே யோகத்தில் இருக்கும்போது நமச்சிவாயருக்குப் பசியுண்டாயிற்று. அப்போது,

” ஊன்பயிலும் காயம் உலராமல் உன்றனது
வான்பயிலும் பொன்னடியை வாழ்த்துவேன் – தேன்பயிலும்
சொல்லியல் நல்லார் துதிக்கும் சிவகாம
வல்லியே சோறு கொண்டு வா

— இவ்வெண்பாவினைச் சொல்லினார். — உடனே சிவகாமி அம்மையார் அமுது கொண்டுவந்து நின்று,

” கொண்டுவந்தேன் சோறு குகை நமச்சி வாயரது
தொண்டர் அடியார் சுகிக்கவே – பண்டுகந்த
பேய்ச்சிமுலை யுண்ட பெருமாளுடன் பிறந்த
நாச்சி சிவகாமி நான்…”

என்ற வெண்பாவினைத் திருவாய் மலர்ந்தருளினார். இவ்வாறாகவே, சிவகாமசுந்தரி தேவியார் குரு நமச்சிவாயருக்கு ஒவ்வொரு நாளும் அன்னம் அளிக்க குரு நமச்சிவாயர் யோகத்தில் இருந்து வந்தார். இவ்வாறாக இவர், சிவயோகத்தில் இருக்கிற காலங்களில் இவரை காணவரும் அன்பர்கள் பொன்னையும் பொருளையும் எதிரில் வைத்துவிட்டுச் சென்றார்கள். அவற்றைக் கண்ட குரு நமச்சிவாயர், ”இவை இவ்விடத்திற்கு என் வந்தன? இவை ட்கொல்லி, இங்கு இது வேண்டாம்” என்று அந்த நேரத்தில் இருந்தவர்களை எடுத்துச் செல்லுமாறு கட்டளையிட்டு விடுவார். இவற்றை கண்ட தில்லை மூவாயிரம். ”இவ்வளவு செல்வமும் வீணாகிறதே!” என்று தம்முடன் கூடிப்பேசிக் குரு நமச்சிவாயர் இடம் சென்று, ”சுவாமி,நீர் இவ்விடத்தில் இருப்பதனால், அன்பர்கள் தரும் பொருள்கள் வீணாகின்றன.திருக்கோயிலின் உள்ளே வந்து தங்கினால், எல்லாப் பொருளும் பல்வேறு வகையான திருப்பணிகள் செய்வதற்கு பயன்படும்.பல கட்டளைகள் நடைபெற வழியுண்டாகும்” என்று வேண்டிக்கொண்டனர். அப்போது குரு நமச்சிவாய தேவர், அர்ச்சகர்களை நோக்கி. ”நாம் நமது குருவின் ணைப்படி இவ்விடத்தில் வந்திருக்கிறோம்.தலால் யாம் அங்கு வர இயலாது” என்று மறுத்துவிட்டார்.உடனே, தில்லை மூவாயிரவருள் சிறப்புற்றிருந்த சீவன்முத்தர்,சடாமுத்தர், மகாமுத்தர் கிய மூவரும் அம்பலத்தாரிடம் சென்று, ”பெருமானே! குரு நமச்சிவாய மூர்த்தி கோயிலுக்குள்ளே வந்தால் பல திருப்பணிகள் நடைபெறவும்,பல அறக்கட்டளைகள்
தொடர்கள் தொடர்ந்து நடைபெறவும், வழியுண்டாகும்.” என்று சொன்னார்கள்.”நன்று, நீவீர் சென்று அழைத்தால் வாரார் யாமே சென்று அழைப்போம்” கூறி, மூப்பு நிறைந்த அடியவராய்த் தண்டு கமண்டலம் பிடித்துக் கொண்டு திருப்பாற்கடல் என்னும் இடத்திற்கு வந்து குரு நமச்சிவாய மூர்த்தியின் எதிரே நின்றார். குரு நமச்சிவாயர்யோகம் தெளிந்து முன் நிற்பவரைப் பார்த்தார். குரு நமச்சிவாயர் யோகம் தெளிந்து முன் நிற்பவரைப் பார்த்தார். கண்ணுற்றவுடனே, ”ஐயனே!போற்றி” என்றார்.வந்து நின்ற வரும் ”போற்றி போற்றி” என்றார். குரு நமச்சிவாயர், வந்து நின்ற முதுமை நிறைந்த அடியாரைப் பார்த்து, ”ஐயா!நீங்கள் இருப்பது எந்த ஊர்?’‘ என்றார். அவர் ”நாம் இருப்பது தில்லைவனம்”

என்றார் உம்முடைய பெயர் என்ன?” என, ”எம் பெயர் அம்பலத்தாடுவார்” என்றார். ”நீர் என்ன அலுவலாக இங்கு வந்தீர்” என்று கேட்க எனக்கு அன்னம் தேவையாக இருக்கிறது; இவ்வூர் எங்கும் சுற்றினேன், அன்னம் கிடைக்கவில்லை, இவ்விடத்தில் அன்னம் கிடைக்கும் என்று சொல்லினர். கவே, உம்மிடம் வந்துள்ளேன்” என்றார்.முதியராய் வந்து நின்ற அடியவர்,. அப்பொழுது குரு நமச்சியாவாய மூர்த்தி, ”ஐயா! என்னிடம் அன்னம் இல்லை. எனக்குச் சிவகாசுந்தரி அம்மையார் உணவளித்து வருகிறார். எம்மிடம் பாத்திரம் கூட இல்லை” என்று சொல்லினார்.அப்போது வந்த முதியவர்”சுவாமி! என்னிடம் பாத்திரம் இருக்கிறது”என்று சொல்லிச் சந்திரனைப் பாத்திரமாக வைத்தார்.அப்போது குரு நமச்சிவாயர்,அன்னை சிவகாமசுந்தரியைச் சிந்தனை செய்தார். அன்னம் வந்தது! முதிய அடியவரை நோக்கி ”இதனை ஏற்றுக்கொள்ளும்”என்றார்.

அப்போது அம்பலத்தாடுவார், ‘நாம் இதனை ஏற்றுக்கொள்ளோம்’ என்றார். குரு நமச்சியாவர் ”காரணம் என்ன?” என்று வினாவ, அடியவர், ”ஐயா! இவ்வாறே ஒவ்வொரு நாளும் உணவளிப்பதாக உறுதி கூறினால் ஏற்றுக்கொள்வோம், இன்றேல் ஏற்றுக்கொள்ளோம்” என்றார்.அது கேட்ட குரு நமச்சிவாயர், ”நீர் மிகவும் மூப்படைந்திருக்கின்றீர்! யானோ, இன்று இவ்வூரில் இருக்கிறேன், நாளை காசியோ,இராமேசுவரமோ அறியேன்; இவ்வாறு இருப்ப உமக்கு நித்தியம் அன்னம் கொடுக்கிறோம் என்று எவ்வாறு கூற இயலும்?” என்றார்.அப்போது அம்பலத்தாடுவார், ”ஐயா! நீர் செல்லும் திசைகளில் யாம் உமக்கு முன்னே நடந்தால் அன்னம் கொடும். உமக்குப் பின்னால் நடந்தால் அன்னம் வேண்டாம் என்றார்.அப்போது, குரு நமச்சிவாயர், ‘நீர் முன்னே நின்றால் அன்னம் கொடுக்கிறேன், இன்றேல் இயலாது” என்றார்.அம்பலத்தாடுவாரும் அதற்கு இசைந்தார். கவே குரு நமச்சிவாயர் சுவாமியை பார்த்து ”உணவு கொள்ளும்”என்றார்.அதற்கு அவர்,’ திருநீற்றுக் கோயிலையும் உருத்திராக்கத்தையும் தொட்டு உறுதி கூறிக்கொடுத்தால் கொள்வோம்”என்றார்.குரு நமச்சிவாயர் அவ்வாறே செய்ய, வந்த அடியவர் கொடுத்த அமுதைக் கொள்வது போல் காட்டி, ”நீர் வேட்கை தணியுமாறு தண்ணீர் தரவேண்டும்” என்றார். குரு நமச்சிவாயர் அருகிலிருந்த திருப்பாற்கடல் எனப்படும் நீர் நிலைக்காட்டி,”அதன்கண் நீர் அருந்துக!” என்றார். அவ்வாறே நீர் அருந்தச் செல்பவர் போல் காட்டி மறைந்தருளினார்.

மறைந்தருளிய அம்பலத்தாடுவார் தில்லை மூவாயிரவரிடம், ‘நாம் சென்று குரு நமச்சிவாயன் கோயிலுக்குள் வருவதற்குரிய வழியை வகுத்து விட்டோ ம், நீவீர் அனைவரும் கூடி விருதுகளுடனும் நாம் ஏறும் பல்லக்கு உடனும் சென்று, வீதிவலமாக நம்மிடம் அழைத்து வருக!” என்றார்.அவ்வாறே தில்லை மூவாயிரவரும் சென்று வணங்கிப் பல்லக்கில் ஏறுமாறு வேண்டினர். குரு நமச்சிவாயரை நோக்கி,”சுவாமி! இது பல்லக்கன்று, சூந்ய சிங்காசனம் என்றனர். அப்பொழுதும் குரு நமச்சிவாயர் மறுத்துவிட்டார்.

பிறகு மூவாயிரம், ” ஐயனே! நேற்று நண்பகலில் எம்பெருமான் உம்மிடம் வந்தார் அல்லவா, நீர் அவரிடம் யாது கூறினீர்” என்றார்கள்.குரு நமச்சிவாயர் யோகக் காட்சியினால் பார்த்தார். சபாபதியின் காட்சி கிடைத்தது. ”சபாநாயகர் இவ்விடத்தில் வந்து என்னுடன் உடையாடி அங்கும் சென்று செய்தி கூறினரோ!” என்று பரமன் அருளைப்பாராட்டி,

சங்கயமாய் அம்பலவர் தாமே எழுந்தருளி
யிங்கெமக்குப் பிச்சை யிடுவென்ன-வங்கமுது
திட்டமு டன் நமக்கு நீதினமு மேசர்வ
கட்டளையுண் டாக்குகென்றார் காண்”

என்றவெண்பாவைப் பாடிக்கொண்டே பல்லாக்கில் ஏறி, அல்லாகிய இருவினை தனையறுத் தடியினை தருவாரோ? மல்லல் நீடிய புவியின் மேலின்னமும் வரும் பிறப்பறுப்பாரோ? நல்ல மாமுலை மாதுமை நாயகர் நாயகர் நான் நிதம் நவின்றேத்தும் தில்லைநாயகர் அம்பலத் தாடுவார் திருவுளம் தெரியாதோ! என்ற ஓதிக்கொண்டே கோயிலுக்குட் சென்று கொடி மரத்தருகே பல்லாக்கில் இருந்து இறங்கிப் பஞ்சாக்கரமதில் மட்டும் பாதக்குறடு இட்டு சென்றார்.பிறகு பொன்னம் பலத்தை அணுகி, திருநடம்புரி தேசிகனை வணங்கி தில்லை மூவாயிரவரைப் பார்த்து, இப்போது நாம் உண்டாக்க வேண்டிய கட்டளையாது!” என்று வினவினார்! அப்போது சபாநாயகர்,”சர்வ ஜனத்துக்கும் சர்வ கட்டளை என்று அசரீயாய் நின்று உணர்த்தினார். ”சபாநாயகர் பிச்சை கொடுத்தால் கட்டளை எப்போதும் தொடந்து நடைபெறும்” என்று சொல்லிக்கொண்டே பொற்றாம்பாளத்தைக் கையில் ஏந்தி

”காத லுடன் சர்வ கட்டளையாய் உன்னுடைய
பாத மலர்ப்பூசை பண்ணவே – ஓது
குருவா யெனையாண்டு கொண்டவனே! பிச்சை
தருவாய் சிதம்பர நாதா”

என்ற வெண்பாவைப் பாடினார்.
அப்போது குரு நமச்சிவாயர் வேண்டுளுக்கிணங்கி அங்கு வந்திருந்த அடியார்களும்
அன்பர்களும் காணுமாறு தங்ககாசு ஒன்று தட்டிலே வீழ்ந்தது ”நடராசப்பெருமானே நாம் அனைவரும் காணுமாறு பிச்சையிட்டார். கவே நாமும் நன்கொடையளிக்க வேண்டும்” என்று வந்திருந்த பெரும்பான்மையினர் பொன்னும்,பொருளும் போட்டார்கள்.குரு நமச்சிவாயர் தங்கத் தட்டினைத் தனக்கு முன்னிருந்த அர்ச்சர்களிடம் கொடுத்து அவ்விடத்தை விட்டு புறப்பட்டார். அப்போது சிறிது தாங்கிற்று. உடனே குரு நமச்சிவாயர் ”இதற்குக் காரணம் என்ன?” என்று மூவாயிரவரை கேட்டார்.

அதற்கு அவர்கள் ”நாங்கள் ஏதும் அறியோம்”என்றனர். குரு நமச்சிவாயர் யோகக் கண்கொண்டு நோக்கினார். மூவாயிரைவரை நோக்கி,சுவாமிக்கு அணிகலன் இருந்ததுண்டா? என்று வினாவினார். அவர்கள்”இல்லை” என்றனர். பின், சிறிது நேரம் சிந்தைனை செய்து ”பதஞ்சலியாக்கிர பாதர்காலத்தில் பாதச்சிலம்பும் கிண்கிணியும் இருந்தன’ என்று சொல்வார் யாம் கண்டதில்லை என்றார்கள். அவர் தம் கூற்றினைக் கேட்ட குரு நம்ச்சிவாயர், சிற்பிகளை அழைப்பித்துப் ”பாதச்சிலம்பும் கிண்கிணியும் விரகண்டா மணியும் செய்யவேண்டும், அவற்றைச் செய்ய எவ்வளவு பொன் தேவைப்படும்” என்றார் சிற்பிகள்” அவற்றைச் செய்ய ஐம்பதினாயிரம் பொன் தேவை” என்றார். வந்து சேர்ந்திருக்கின்ற பொன்னையும் பொருளையும் கொடுத்துத் திருவாபரணம் செய்து முடிக்குமாறு சிற்பிகளிடம் கூறி அனுப்பிவிட்டு திருக்கோயிலின் ஒருபுறத்தே அமர்ந்திருந்தார். அப்போது தில்லை மூவாயிரவர்கள் ஒன்று சேர்ந்து ”நாம் அனைவரும் இவரைத்
துணையாகக்கொண்டு நல்வாழ்வு வாழலாம் என்று நினைத்திருந்தோம்.செல்வத்தை எல்லாம்
சிலம்பும், கிண்கிணியும் வீரகண்டாமணியும் செய்யக் கொடுத்துவிட்டாரே!” என்று குரு நமச்சிவாயர் மேல் குறைகூறிப் பேசினார். அன்றியும்”சிலம்பும் கிண்கிணியும் வீரகண்டா மணியம் அணிந்துவிட்டால்,அம்பலவாணர் இவருக்கு நடனம் செய்து காட்டுவரோ?” என்று ஏளனமாகப் பேசினர். இவர்தம் உரையாடல் குரு நமச்சிவாயர்தம் செவியில் பட்டது. இவர்தம் நிலை இவ்வாறு இருப்ப, நாற்பதாம் நாள் சிலம்பும் கிண்கிணியும் செய்யபெற்று வந்து சேர்ந்தன. அப்போது குரு நமச்சிவாயர் தில்லை மூவாயிரம் பிறரையும் அழைத்து, இப்போது தில்லை அம்பகூத்தன் நடனம் செய்து காட்டினால் அவைவரும் காண்பீரோ?” என்றார். அங்கிருந்தார் அனைவரும் ”அம்பலவாணர் திருக்கூத்தினைக்காண எத்தனை பிறவிகளில் நாங்கள் புண்ணியகுரு நமச்சிவாய மூர்த்தி நடராசப்பெருமான் திருவடிகளில் சிலம்பும் கிண்கிணியும் அணிந்து தரிசனம் செய்யுமாறு சொல்லியபின் இறைவன் திருநடனத்தை காண் விரும்பினராய்,ம் செய்திருக்கவேண்டும்ம். மூவேழ்தலை முறையினரும் கரையேறிவார்களே! என்றார்கள்.

”அம்பலவா ஓர்கால் அடினால் தாழ்வாமோ
உம்பாரெல்லாம் கண்டதென கொப்பாமோ – சம்புவே
வெற்றிப் பதஞ்சலிக்கும் வெம்புலிக்கும் தித்தியென
ஒத்துப் பதஞ்சலிக்கு மோ”

என்ற பாட்டினை பாடினார். உடனே கல கல வென்றொரு ஓசை கேட்டது. குரு நமச்சிவாயர் நின்று தோத்திரம் செய்வாராயினர். தில்லை கூத்தன் நடனம் செய்யத் தொடங்கினார். எல்லோரும் கீழே விழுந்து வணங்கி அசைவற்றிருந்தார்கள். அப்போது மூவாயிரவருள் மூன்று பேர் ”நீண்ட நேரமாகத் திருநடனம் நிகழ்கிறபடியால் நடனத்தை நிறுத்தவேண்டும்” என கூறக் குரு நமச்சிவாயர், ”ஆடச் சொல்கிறவர் நாமோ?” என்றார். மீண்டும் அந்த மூவரும், ” தாளம் போடுகினறவர்கள் நிற்கவேண்டும்” என்றனர். அப்போது குரு நமச்சிவாயர் அம்பலவாரை நோக்கிப் ”பெருமானே! தூக்கிய கால் நோகாதோ? துட்டன் முயலகன் மேல் ஊன்றிய கால் சலியாதோ? என்று கருத்து அமைய ஒரு வெண்பா இயற்றினார். உடனே, நடனம் மிகவும் சிறப்பாக நடைபெறலாயிற்று. குரு நமச்சிவாயர் மீண்டும் மனமுருகி வெண்பா ஒன்றினை பாட திருநடனம் நின்றது.
அதற்கு மேல் தில்லை மூவாயிரம் கூடி, ”குரு நமச்சிவாயர் பரிபூரணத்தை அடைந்து காரணமானதால் நாங்கள் பூசிப்போம்” என்று சொல்லிக்கொண்டார்கள். குரு நமச்சிவாயர் மேல் குடிமக்களும் ‘பெருசெல்வரும் வள்ளல் தன்மையுடையவர்களும், குறுநில மன்னர்களும், அளவற்ற அன்புக்கொண்டு அவர் பெயரால் நடைபெறும் அம்பலவாணர்
திருக்கோயில் திருப்பணிக்கு நிறைவான பொருளைக் கொடுத்தனர். பல்வேறு அறக்கட்டளைகள் ஏற்பட்டன.அன்றியும் எழுபத்திரண்டு தம்பிரான்களுக்குப் பல்லக்கும் விருதும் மற்றும் கொடுத்து நாடெங்கும் அனுப்பிக் கோயில் திருப்பணிகளும், அறக்கட்டளைகளும் விரிவாகவும் சிறப்பாகவும் நடைபெற வழி வகுக்கப்பெற்றது. இவ்வாறாக் குரு நமச்சிவாய சுவாமிகள் காலத்தில் சைவம் தழைத்து ஓங்கிற்று, கோயில் திருப்பணிகள் விரிவாக நடைபெற்றன. பல்வேறு அறக்கட்டளைகள் உண்டாயின.

குரு நமச்சிவாய மூர்த்தி, தலயாத்திரை பல இடங்களுக்குச் சென்று, ஆங்காங்குள்ள பெருஞ்செல்வர்கள் தானமாகக் கொடுத்த பல கிராமங்களைத் திருமடத்தில் நடைபெறும் அன்றாட தருமங்களுக்காவும் அம்பலக் கூத்தர் திருக்கோயிலில் நடைபெறும் சர்வ கட்டளைக்காகவும் சிலாசனம் செய்து வைத்தார். இவ்வாறாகப் பல சிவ தருமங்கள்
சிறப்பாக நடைபெற வழிவகுத்த பின்னரும் பல்லாண்டு வாழ்ந்திருந்து, திருப்பெருந்துறை
சென்று அங்கே இலிங்காரம் யினர்.

”வத்தீச் சுரவருடம் வைகாசி தேதிநவம்
இந்துநா னாழிகை யேழரைமேல் – வந்தகுரு
தானா மருணகிரி தாணுசிவ லிங்கத்துள்
னால் நம்ச்சிவா யன்..”

குரு நமச்சிவாயர் அம்பல கூத்தருக்கு அளித்த நிலங்கள் அணிகலன்கள், தோப்புகள் பற்றிய கல்வெட்டுகள் தில்லைக் கோயிலிலும் பிற இடங்களிலும் மிகுதியாகக் காணப்படுப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது.

Text by சிங்கை கிருஷ்ணன்

”குகை நமசிவாய சித்தர் ஓவியங்கள் ”

எழுதியவர் : (7-Dec-17, 3:56 am)
பார்வை : 83

மேலே