காலமெல்லாம் காத்திருப்பேன்

*காலமெல்லாம் காத்திருப்பேன்*
அத்துவானங்காட்டுகுள்ளே
ஆடித்திரியும் பறவைபாேல
சிறகடித்த என் மனதை
சிறைபிடித்துச் சென்றவளே...
சிறைவாசம் இனியதென்பேன்
அன்பே அது உன் இதயச்சிறையென்றால்...
கண்டதுமே காதலில்லை
என்றிருந்தேன் இத்தனை நாள்
கண்டுகாெண்டேன் காதலியே
கருத்துதன்னே பாெய்யென்று !
எத்தனையாே நாட்களிலே
நித்திரையில் நீயும் வந்தால்
நீண்டிடாதாே நித்திரைதான்
நீயும் என்னை சேரும்வரை...
கனவிலும் உன் நினைவிலும்
வாழ்ந்ததெல்லாம் பாேதுமென்று
வந்தனேடி காதல் சாெல்ல
காதலியே உன்னிடத்தில்,
நொந்தேனடி சேதிகேட்டு
நீயும் ஒருவனை சேர்ந்தாய் என்று
அன்று,
உன் நினைவுகளோடு
பேசிச்சிரிக்கையில்
பார்பவர்கள் பைத்தியமென்றாலும்
பரவாயில்லை என்றிருந்தேன்
இன்று, அதுவே
மெய்யாகிவிட்டதடி பொய்யாகிப்பாேன
என் ஒருதலைக்காதலால்...
நீரின்மேலே தாமரைபாேலே
நீயும் நானும் சேர்ந்திருப்பாேமென
நினைத்திருந்தேனே நான்
நீயாே
கோடை வந்த ஓடை நீரென
மோகம் கொண்டு மேகத்திடம்
சேர்ந்தாயடி....
மேகத்திடம் சேர்ந்தாலும்
மீண்டும் மழையாய் மாறி
ஓடி வந்து ஓடைச்சேர்வாயென
வாடி நிற்கும் தாமரை போலே
காலமெல்லாம் காத்திருப்பேன்
காதலியே உன் காதலுக்காக...
என்றும்
எழுத்தாணிமுனையில்
கவிரசிகன் கார்த்திகேயன்