கையறு நிலையை மாற்றுவோம்
![](https://eluthu.com/images/loading.gif)
தீய ராமன்கள் இணையானால்
தீக்குளிக்கும் சீதையாகோம்!
கண்ணகியாய் மாறிக்
கணவனையும் எரிப்போம்!
கூடையில் சுமக்கும்
நளாயினிகளாயன்றிக்
கூண்டினில் ஏற்றும்
நாகினிகள் ஆவோம்!
தமயந்திகளாயன்றித்
தனித்துவம் காப்போம்
சந்திரமதிகளாயன்றிச்
சபதம் கொள்வோம்!
வன்முறைகள் பல கண்ட
வரலாறு எழுதட்டும் இனி
வீறுகொண்ட வேங்கைகளைச்
சீண்டிப் பார்க்காதீரென!
காலம் காலமாய் வந்த
கைவிலங்கை உடைத்தே
காவியம் நாட்டுவோம்!
கையறு நிலையை மாற்றுவோம்!