இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
தெளிந்த மனதினில் அமைதி நிலவும்
துன்பம் இருந்த போதும்
ஒரு நாள் இன்பம் வந்தே சேரும் ...
சூழ்ச்சி அதை கழைந்திடு
வீரம் கொண்டு நீயும் எழுந்திடு
தமிழன் என்று சொல்லிடு
என்றும் பிறர் தலைவணங்க வாழ்ந்திடு ..
காலம் அது ஓடலாம்
அதில் காட்சி கூட மாறலாம்
அநியாயம் உன்னை சூழலாம்
பொறுமை நீ கொண்டால் வெற்றி காணலாம் ...
தூற்றுபவர்கள் உன்னை தூற்றட்டும்
போற்றுபவர்கள் உன்னை போற்றட்டும்
உயிராய் பழகிய உறவுகள் மாறட்டும்
இவையெல்லாம் மாயை என்றறியாத மனதில் வரும் போராட்டம் ....
அன்பாய் பழகிப்பார்
ஆண்டவன் உன்னுள் வாழ்வார்
பிறர் துயரம் துடைத்துப்பார்
ஆண்டவன் நீயே என்பார் ...
இதுவும் கடந்து போகும்
தெளிந்த மனதினில் மட்டும் அமைதி நிலவும்
துன்பம் இருந்த போதும்
ஒரு நாள் இன்பம் வந்தே சேரும் ...
என்றும் ..என்றென்றும் ...
ஜீவன் 👍👍👈👈
...