நினைக்காதே
அன்பே
உன் விழிக்கொண்டு என்னை
விழுங்கிவிடலாம் என்று
நினைக்காதே!
வளைந்த புருவத்தினைக்கொண்டு
என்னை புரட்டிபோடலாம் என்று
நினைக்காதே!
மயிரிழைக் கொண்ட சடையால்
என்னை சாகடிக்கலாம் என்று
நினைக்காதே!
வட்ட வடிவ
நெத்திப் பொட்டினை வைத்து
என்னை
வளைத்துப்போடலாம் என்று
நினைக்காதே!
காதோரமாடும் கம்மலால் என்னை
கவிழ்த்துவிடலாம் என்று
நினைக்காதே!
மலர்ந்த முகமதைக் காட்டி என்
மனதை மயக்கிவிடலாம் என்று
நினைக்காதே!
ஏன் இந்த முயற்சி?
யாரைக்கொல்ல இந்த பயிற்சி?
உன்னை நினைத்த நாளிலேயே
என்னை இழக்க தொடங்கியபோது!
இன்னும் என்னுயிரை
எடுக்க நினைத்தால்
என்னால் என்ன செய்ய முடியும்...!!!