இன்னுமென்ன சொல்ல
நானொரு தனிப்புறா...
நாளும் எழுதுகிறேன்,
நீயே எந்தன் ஜோடிப்புறா...
கண்களால் பேசியது மறந்ததா?
என் கண்களுக்குள் புதைந்தவளே பதில் சொல்லடி...
வருடங்கள் கடந்தபின்பும் நேற்று கண்ட கனவாய் நிகழ்வுகளின் நினைவு என் நெஞ்சை சிதைக்குதடி...
நஞ்சை உண்டு மாய்வதென்றால் அதுவே கோழைத்தனமடி...
என் செல்லமே,
என் தங்கமே, என்று நானும் கொஞ்சிட அடி பெண்ணே நீ வருவாயோ?
நினைவுகளை அழித்திட நானும் மருந்து தேடுறேன்...
தேடி எடுத்த மருந்தை அடி இனியவளே உண்ண மறுக்குறேன்...
மனதை வசப்படுத்திட மந்திரங்களை உச்சரிக்கிறேன்...
மந்திரங்களே மறந்து அடி உன் பெயரை நானும் உச்சரிக்கிறேன்...
உயிர் போகாத நரகம்...
நாளும் மாறும் யுகமாய்...
யுகங்கள் தாண்டி வாழ்கிறேனா?
உன் காதல் மொழி கேட்க ஏங்குகிறேன்...
உன்னுடன் நான் வாழ நினைப்பதையெல்லாம் கற்பனையாய் கதைகளாய் எழுதி தொலைக்கிறேன்...
படிப்பவர் அருமை என்றிட,
வெறுப்பவர் அறுவை என்றிட,
ஆறுதலேது பெண்ணே,
உன்னைத் தொலைத்த என் வாழ்வில்...
செத்தால் சுற்றத்தாருக்கு ஒருநாள் வேதனை தானடி...
உன் பிரிவில் எனக்கோ அனுதினமும் இதயம் ஆணி அடித்தாற் போலே வலிக்குதடி...
உனக்குப் புரியாத என் வலிகளைப் பற்றி இன்னுமென்ன சொல்ல?