புது பெயர்
பின் தொடர்தலில்
அவள்
எனக்கு முதன்முதலாய்
சூட்டிய பெயர்
'டேய் பொறுக்கி''
சிலபல
பட்டங்களுக்கு
பிறகு
'டேய் மாமா ''
அதுவும்
சில தினங்களில்
'டேய் புருஷா ''
சில கனத்த
மௌனப்போராட்டங்களுக்கு
பிறகு ,,,,
புல்முளைத்த
பாலைவனமாய்
என்முகம்,,,
சில கால
இடைவெளிகளுக்கு
பிறகு
வீதி தேடி
அலைகையில்
வீட்டு திண்ணையில்
சோபையிழந்த
சிலையாய்
என்னவள் ,,!
சாப்பிட மறுத்து
அழுது அடம்பிடிக்கும்
அவள் குழந்தையிடம்
அலட்டி சொல்கிறாள்
''பூச்சாண்டி மாமா'கிட்ட
புடிச்சி கொடுத்துடுவேன்
சாப்பிடு என்று ,,,, !