பெண் எனும் புதிர்
மயக்கும் விழிப் பார்வை மந்திரப் புன்னகை
சொற்களால் என்னை வசியம் செய்தாள்
வைகறைப் பொழுதில் என்னை விழிக்க வைத்தாள்
நினைவில் பசுமையை முழுதாய் விதைத்தாள்
அவளைக் கண்டால் மயக்கம்
காணாவிடில் தோறும் ஏனோ ஏக்கம்
நாள் முழுவதும் என்னை சொக்க வைத்தாள்
இது என் இளவேனில் காலம்
மண வாழ்வில் இணைந்தாள் இன்று!!
பார்வையால் என்னை எரிக்கிறாள்
விழிகளால் வெறுப்பை விதைக்கிறாள்
தூக்கத்தில் தான் கிடைக்கும் நிம்மதி
அதற்காய் நான் அதிகம் தூங்குகிறேன்
எழுந்தால் தொடங்கும் அவள் ராஜாங்கம்
எங்கும் எப்போதும் காண்பேன் ருத்ர தாண்டவம்
நாள் முழுவதும் என்னை உயிரோடு எரி க்கிறாள்
இது என் முது வேனில் காலமோ?
பெண் என்ன சொர்க்கமா இல்லை நரகமா?
பதில் புரியாமல் தவிக்கின்றேன்
விடை தெரியாது திகைக்கின்றேன்
ஆக்கம்
அஷ்ரப் அலி