உனை எண்ணி உன்னையே எண்ணி ஓர் கவிதை
உன்னை எண்ணி
உன்னையே எண்ணி
கவிதை எழுத யோசிக்கிறேன்..
கவிதையை பற்றி ஓர் கவிதை .
கவிதையாய் பிறந்து
கவிதையாய் தவழ்ந்து
கவிதையாய் வாழ்பவளே ..!
உன்னை எண்ணி
உன்னையே எண்ணி இந்த கவிதை . .
உன்னை பற்றி எழுத எத்தனித்தேன் ..
உயிரற்ற எழுத்துக்கள் எல்லாம்
உயிர் பெறுகிறது உன்னை தொட்டவுடன்..
உயிர் பெற்ற எழுத்துக்கள்
வார்த்தைகளாய் மாறி
வானவில்லாய் மாறுகிறது ..
வானவில்லாய் மாறி
வானத்தில்
வண்ணவிழா ஏற்றுகிறது ..
எண்ணத்தில் உன்னை நிறுத்தி
என்னன்னவோ யோசிக்கிறேன் ..
எல்லோரும் கவிதை எழுதலாம் ..
ஆனால்
கவிதையாய் வாழ
கவிதையே உன்னால் மட்டும்தான் இயலும்..
உன் இதழில் உள்ள வரிகள் ஒரு கவிதை ..
அவ்விதழ்கள் மூலம் வெளிப்படும் ஒலி ஒரு கவிதை ..
கண்களோ கவிதை.. உன்
கண் சிமிட்டல்களோ ஓர் கவிதை ..
காதுகளோ கவிதை .. அசைந்தாடும்
காதணிகளோ ஓர் கவிதை ..
இடையோ ஓர் கவிதையடி .. உன்
நடையோ ஓர் கவிதையடி ..
அலையாய் பாயும் உன் கூந்தல் ஓர் கவிதையடி ..
அருவியாய் பாயும் உன் காதல் ஓர் கவிதையடி ..
அன்பாய் பேசும் உன் மனம் ஓர் கவிதையடி ..
ஆறுதலாய் ஓர் வார்த்தைக்கு ஏங்கும் உன் மனம் ஓர் கவிதையடி .. எல்லாரும்
இன்புற இடிதாங்கியாய் இடையில் நிற்கும் நீ ஓர் கவிதையடி ..
ஈன்று பெற்ற பிள்ளையும்
உனை உதறும்போதும்
உற்றவன் பெற்றவன் உதறும் போதும் கவலையை உன்
எண்ணத்தில் நிறுத்ததடி என் கவிதையே ..
ஏளனமாய் பேச
ஐந்தறிவு ஜீவன்கள் இங்கு நிறைய உண்டு ..
ஒப்பனையில் ஓர் தேவதையே ... உனக்கு
ஓவென்று அழுக ஓர் ஆயிரம் காரணங்கள் உண்டு ..
கதறி கண்ணீர் விட பல கதைகள் உண்டு ....
விட்டு எறிய பல உறவுகள் உண்டு ..
இருந்தும் மனதில் ஒளித்து
பிறர் நோகா வண்ணம் பேசும் கவிதையே..
பேச வார்த்தைகள் உண்டு
பறக்க இறக்கைகள் உண்டு
கண் நெறய காதல் உண்டு
யாரும் அறியா கோபமும் உண்டு..
வருத்தும் வாழ்க்கை உண்டு ..
விட்டுப்பிடிக்கவும்
விட்டுக்கொடுக்கவும் உனை போல் ஓர் ஆள் இல்லையடி ..
யாரையும் நம்பும் உன் குணம் ஓர் பெரும் கவிதையடி ..