உன்ன இப்போ பாக்கணும் போல இருக்கு
![](https://eluthu.com/images/loading.gif)
சின்ன சின்ன சண்டையால் சிதைத்த நம் காதல்
பல சில்மிஷ நிமிடங்கள் நிறைந்தது
கனவிலும் நடக்காத தருணங்கள்
நிஜத்தில் நம் காதலால் நிகழ்ந்தது
பொறுமை கொண்டு பொறுத்திருந்தேன்
உன் முன் கோபம் உன்னை அடிமைப்படுத்தி
என்னை உன் இதயத்திலிருந்து அனுப்பி வைத்தது
நாட்கள் நகர நகர ஏதேதோ என் வாழ்வில் நடந்து விட்டது
இப்போதும் இந்த இதயக் கோவிலில் நீ மட்டும்தான் காதல் தெய்வபாக காட்சியளிக்கிறாய் அன்பே .
படைப்பு
எழுத்து ரவி.சு