மது வழி மறப்போம்

புது வழி பிறக்க மது வழி மறப்போம் //
இல்லறம் சிறக்க மது வழியை கொல்வோம்// //
மது மேகத்தில் உறங்கி //
மது போதை போல வாழ்வை தள்ளாட வைக்காதே _ மானுட//
உன் வாழ்வு மதுவால் பிரிக்கப் பட்டால் தூக்கி எறியப்படுவது //
குடும்பத்தின் வேர் அல்லவா

உன் கிளையான பிள்ளைகளும் //
இலை போல நொந்து// ஒடிந்து விழுவார்கள்//

உன் வாழ்வை மரிக்கும் மது திரையை //
கதிரவனாய் மாறி கொளுத்திவிடுவோம்//
காயங்கள் இன்றியே வாழ்வை காத்துடுவோம்//

பாசம் தீண்ட தீண்ட அழகாகிறது வாழ்வும்//
மது போதை தீண்ட தீண்ட// வாழ்வும் அலங்கோலமாக
மாறுகிறது_மானுட

எழுதியவர் : காலையடி அகிலன் (15-Dec-17, 11:13 am)
பார்வை : 132

மேலே