தொலைந்து போனதோ வாழ்க்கை காட்சி
நாளும் கிழமையும் வந்துவிட்டால் போதும்!
தொலைக்காட்சி நமது சிந்தைகளை தொலைக்கும் சாட்சியாக அமைந்துவிடுகின்றது!
எங்கோ தொலைவில் இருந்து கொண்டு உன்னை தொலை நோக்கு பார்வை செய்கின்றது!
மனிதா! நீயோ தொலைக்காட்சிக்கு அருகில் அமர்ந்து கொண்டு உன் சிந்தனைகளை தொலைத்து கொண்டு இருக்கின்றாய்!
ஒவ்வொரு நிமிடமும் உனக்கு தங்க கட்டிகளாகும்!
தொலைகாட்சிக்கு ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வைர கட்டிகளாக மாற்றுகின்றன!
தொலைவில் உங்களுக்கான வாழ்க்கை காட்சிகள் தர தயாராக உள்ளது!
மனிதா நீ மட்டும் ஏன்? தொலைக்காட்சியை பார்த்து உன்னை நீயே மற்றவர்களுக்கு உன்னை காட்சி பொருளாக காட்டுகின்றாய்!
உன்னை வைத்து தொலைக்காட்சி டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னே செல்கின்றது!
மனிதா நீ மட்டும் ஏன்? வாழ்வின் காட்சிகளில் பின்னோக்கி செல்கின்றாய்!
தொலைக்காட்சியில் தொலைந்து போனதோ சிந்தனை!
தொலைகாட்சியில் வந்து போனதோ கற்பனை கதைகள்!
தொலைந்து போன வாழ்க்கையை திரும்ப வரவழையுங்கள்!
அதே தொலைக்காட்சி வாயிலாக உலகமே உங்களை வரவேற்கும் செய்திகள் வரும் வரையில்!
சிந்திப்போம்! செயல்படுவோம்!!
வாழ்வின் காட்சி ஒளிகள் தொலைவில் இல்லை!
உன் அருகில் உள்ளதை தொலை நோக்கு காட்சி கொண்டு பார் உண்மை தெரியும்!
- ஜோதிட கவிஞர் -
ஜோதிட மாமணி செந்தில் வேலவர்
தமிழ்நாடு இந்தியா
+91 97515 00033 +91 97516 30033