புத்தம் புதிது

பனி விலக
பெருமுயற்சி எடுக்காதே
மழை வேண்டுமென
மண்டியிட்டு கதறாதே
தக்க பொழுதில்
தானே நிகழும்.
நல்லது நடக்குமென்பது
நிச்சயமாய் இருக்கையில்
நம்பிக்கை கொள்ள
வலிந்து மனதைக் கசக்காதே.

எழுதியவர் : ஆத்ம ரமணன் (15-Dec-17, 8:17 pm)
சேர்த்தது : ஆனந்த ரமணன்
Tanglish : puththam puthithu
பார்வை : 74

மேலே