வணங்கேலோ ரெம்பாவாய்

மஞ்சுளமாய்க் கீழ்த்திசை வானில் கதிரோனும்
செஞ்சுட ராகத் திருமுகம் காட்டுமுன்
அஞ்சனம் தீட்டிய அங்கயற் கண்களில்
கெஞ்சிடும் தூக்கத்தைக் கிள்ளி எறிந்திட்டு
பஞ்சணை விட்டெழுந்து பாற்கடல் வாசனை
நெஞ்சில் நினைந்துருகி நீராடிப் பக்தியுடன்
சஞ்சலம் நீங்கி தரிசனம் செய்திட
வஞ்சியரே கூடி வணங்கேலோ ரெம்பாவாய் !