மலராத மொட்டுகள்
என்னடா ஆச்சு
உங்களுக்கு
ஏன்டா அலையிறீங்க
பொம்பளைக்கு
பிஞ்சுகள ஏன்டா
கசக்குறீங்க
பெத்தவங்க கனவெல்லாம்
பொசுக்குறீங்க
காசு குடுத்து போக
கண்ட இடம் இருக்கையில
கள்ளமில்லா புள்ளைகள
கருக்குறீங்க
தங்கமுன்னு வைரமுன்னு
வளத்த புள்ள
சக்கையாகி கிடக்குதடா
பாவிகளா
நெஞ்சுக்குழி அடைக்குதடா
பார்க்கையில
நீங்க நாசமாத்தான்
போவீகளோ பாடையில
உன்ன பெத்தவளும்
பொம்பளதான
பச்ச புள்ளய
பாழாக்குறியே
நீயும் ஆம்பளதானா
செருப்பால அடிச்சாலும்
திருந்தமாட்டீங்க
செத்தே போனாலும்
வருந்தமாட்டீங்க
இவனுக
மனுசனா மிருகமா
தெரியல
மழலைகள சீரழிக்கிறதும்
குறையல
தறிகெட்டு திரியும்
பொட்டைகளே
தயவு செஞ்சி
தொடாதீங்க
எங்க மொட்டுகள
கடுமையான சட்டமொன்னு
கொண்டுவாங்க
கருகாம காக்க வேணும்
எங்க மொட்டுகள
வெறிகொண்டு திரியும்
இவனுகள
வெட்டவேணும் நிக்கவச்சி
முச்சந்தியில...
கோபத்துடன்
-சுரேந்தர் கண்ணன்