மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

வெண்பனி பூத்த விடியலின் வாசலில்
கண்கவர் கோலங்கள் கன்னியர்கை வண்ணத்தில்
மண்வீதி யெங்கிலும் மங்கலங் கூட்டிட
வண்டுண்ண தேன்சொரிந்து வண்ணமலர் காத்தாற்போல்
கண்ணனங்கே நிற்கின்றான் காதலுடன் கண்டுவரக்
கெண்டை விழிமலர்ந்து கேசவனைச் சேவிக்கப்
பெண்ணே விரைந்தெழு! பித்தந் தெளிவுறக்,கார்
வண்ணனை வேண்டி மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் !!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (20-Dec-17, 7:58 pm)
பார்வை : 54

மேலே