விழி காண

விழி காணாத வலிகள்
விழி வழியே துளிகள் சிந்துதே!
விழி கண்ட போது மொழிகள்
வழி மொழியா மௌனம் ஏந்துதே!

நீயில்லாது வாடித் தவிக்கிறேன்
துயில் தேடித் துடிக்கிறேன்
கனவினில் நொடியாவது உதிப்பாயென
கண்கள் மூடி நடிக்கிறேன்

என் தவிப்பு உணரும் நாளில்
உன் சிரிப்பு நின்று போகும்
ஏன் கண்கள் சிவப்பு நிறமும் ஆகும்
உன் கண்ணீர் துடைக்க அன்று
என் கல்லறைப் பூக்கள்
வாசம் வீசும்

-சந்திரன் கவிதைகள்-

எழுதியவர் : சந்திரன் (20-Dec-17, 9:23 pm)
Tanglish : vayili kaana
பார்வை : 122

மேலே