நீயும் கூட

கண்கள் நான்கும் உரச
ஆயிரம் தீப்பிழம்புகள் உடலில்
புகுந்து இன்ப வேதனைகளை
தந்ததென்னவோ?நெடுநாளாக
இருந்த குழப்பம் தீர்ந்ததென்னவோ?
இது குழப்பமா?மயக்கமா?
நீ செய்த தந்திரமா?படுக்கையிலிருந்து எழாமல்
புரண்டு படுத்தவாறு நான்
வா என அழைக்கிறாய்
உன் கைகளை பிடித்துக்
கொள்கிறேன் ஆஹா
இதுதானோ ஏகாந்தம்
நட்சத்திரத்தை பிடித்து விட்டேன்
நிலவுக்கு கூட்டிச் செல்வாயோ
ஆகாயத்திலேயே
விட்டுச் செல்வாயோ என்னை
எங்கு வேண்டுமானாலும் இடு
கூடவே நீயும் இரு.

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (20-Dec-17, 7:27 pm)
சேர்த்தது : paridhi kamaraj
Tanglish : neeyum kooda
பார்வை : 281

மேலே