ஏசு

துன்பங்களுக்கெல்லாம் ஆசை உன்னை துன்புறுத்தி பார்க்க
காயங்களுக்கெல்லாம் ஆசை உன் உடம்பில் குடி இருக்க
இறப்புக்கெல்லாம் ஆசை உன் தேகம் ஒரு முறை சந்திக்க
முள்ளுக்கெல்லாம் ஆசை உன் தலைக்கு கிரீடமாய் வாழ
ஆணிக்கெல்லாம் ஆசை உன் விறல் மோதிரமாய் மாட்டிக்கொள்ள
மரங்களுக்கெல்லாம் ஆசை உன்னை தாங்கும் சிலுவையாய் மாற
மண்ணுக்கெல்லாம் ஆசை உன்னை நெஞ்சுக்குள் அணைத்து கொள்ள
உயிருக்கும் உன் மீது ஆசை போல்
பிரிந்ததும் பிரியம் கூடி அணைத்து கொண்டது.......!!

எழுதியவர் : ராஜேஷ் (23-Dec-17, 9:26 am)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : yaesu
பார்வை : 169

மேலே