ஏசு

அன்பை போதித்து அன்னை போல மனிதத்தை காத்த உனக்கு
மனிதன் பணப்பை போதித்து துன் முகம் காட்டி வதைத்தான் ஏன் கர்த்தா


முதல் அடி கொடுத்தால் கன்னம் காட்டு
மறு அடி கொடுத்தால் மறு கன்னம் காட்டு
மீண்டும் அடித்தால் முதுகை காட்டு என உரைத்தீர்கள்
திருப்பி எப்பொழுது அடிக்க என சொல்லி தராமல் போய் விட்டீர்கள்
சிலுவைகள் எங்களுக்கும் உண்டு என்பதை மறந்தீர்களோ ...


ஏளனமாய் சிரித்தவன் கரம் தொட்டு உன்னை மன்னி புதைத்தவன்
எல்லோருக்கும் நீ கொடுத்த தண்டனை அன்பு மட்டுமோ
எப்படி இத்தனை அன்பு சாத்தியம் ஆண்டவரே ........

மறித்து பிறந்தாய் மனிதனின் குணம் அறிந்தாய்
மண்ணில் வாழ மறந்தாய் .........

விவரம் ஏதும் சொல்லாமல் சென்று விட்டீர்கள்
உங்கள் காயம் ஆறியதா..? உங்கள் வலிகள் குறைந்ததா.. ?
நம் குடும்பம் எப்படி உள்ளது..? நம் உறவுகள் அங்கே நலமா கர்த்தா..?
இதயம் வழியே அன்பு கொண்டு உங்கள் நலம் அறிய நான்
எழுதும் தந்தி தினம் உங்களை சந்திக்கிறதா ஆண்டவரே ..!!

பரலோகத்தில் இருக்கும் எம் பரம பிதாவே
பரலோகத்தில் உமது ராஜ்யம் நடப்பதை போல
பூலோகத்தில் ஆட்சி செய்வீராக ராஜாவே
என தினம் நான் உரைப்பது உங்களுக்கு கேட்கிறதா
இன்னும் கேட்கவில்லை போல
எம் உறவுகளை பாதிப்பை பார்த்து உணர்கிறேன்
விண்ணப்பம் நேரடியாக கொடுக்கும் நாளை
எதிர்பாத்து காத்திருக்கிறேன் மரணம் வழியே
ஒற்றை தகவலை உங்களுடன் பரிமாற
ஒற்றனாக வர போகிறேன் ஏசு ராஜாவே ..........

பிதன் சுதன் பரிசுத்தம் ஆவியின் பெயராலே ஆமென்....

எழுதியவர் : ராஜேஷ் (23-Dec-17, 9:25 am)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : yaesu
பார்வை : 431

சிறந்த கவிதைகள்

மேலே