ஒப்பனையில்லா அன்பு

சிறு பிள்ளைகள் மேகம் போன்ற‌
வெண்மை மனம் கொண்டவர்கள்..

அவர்களைக் காணும் போதும்
அவர்களிடம் பேசும் போதும்
அவர்களை கவனிக்கும் போதும்
நாமும் ஆகிறோம்
பிள்ளை மனம் கொண்டவர்களாக...

அவர்களது அருகாமை இனிமை
அவர்களது பேச்சு புத்துணர்ச்சி
அவர்களது விளையாட்டு தென்றல்
அவர்களது அன்பு குறைவில்லாதது..

சட்டெனப் பெய்யும் தூற‌லாய்
சில நேரம் அழுகவும் செய்வார்கள்
அவர்களது துன்பத்திற்காய் வருத்தப்பட்டால்
உடனே சிரிக்கவும் செய்வார்கள்

அழுக்கில்லா அவர்கள் அன்பின் முன்பு
அழுக்குள்ளோரும் அழகாவார்
பழுதில்லா அவர்கள் பாசம் முன்பு
பெருங்கோபமும் கலைந்து போகும்

வெளி ஒப்பனைகளுக்கு முன்பு
இந்த ஒப்பனையில்லா அன்பே
மிக அழகானது
காலம் பூராவும் நம்மை மகிழ வைக்கும்
மிக இனிதானது

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (23-Dec-17, 9:07 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 57

மேலே