நீ நான்

மழையாக நீ
கடலாக நான்
வான் நோக்கியே உன்னை பார்க்கிறேன்...

இருள் வானிலே
ஓர் புன்னகை நீ சிந்தினால்
ஒளியாகுவேன்....

இமை மூடியே
சிறகை கடன்வாங்கியே
நெடுந்தூரம் தாண்டி உன்னை காண்கிறேன்....

ஒளி மாறலாம் இருள் ஆகலாம்
உன் நினைவுகள் என் நெஞ்சில் நிலைமாறுமா...

உனக்காக நான் எனக்காக நீ
நான் கொண்ட எண்ணம் நிறம் மாறுமா....

எழுதியவர் : ராணிகோவிந் (27-Dec-17, 1:34 pm)
சேர்த்தது : ராணிகோவிந்த்
Tanglish : nee naan
பார்வை : 146

மேலே