உதட்டோடு மட்டும் உறவாடி உயிர்போக்கும் காதலி...

சுருட்டிகூட்டிய மூன்றங்குல நீளக்காகிதம் முனைமட்டும்
விரும்பும்வண்ணம் ஓரங்குல வெளிர்பஞ்சினை சாலப்பொருத்தி...
துகள்களாக்கிய புகையிலையில் ஏற்றம்காண்கிறான் வர்த்தகக்கலைஞன்
அகலவாழும் மிகையாசையில் விற்பனைசெய்கிறான் மண்ணின்மைந்தன்...
பற்றவைத்த கரியபுகை கபாலம்வரை கொண்டுசேர்க்க
தொற்றிவாழும் அரியவகை புற்றுநோயும் வந்துசேரும்...
இதழ்களிடை இழுத்தபுகை இமைகளுக்கு வன்மம்புகுத்தும்
இயல்மறந்த பழுத்தமேனி பழுதாகி பழாகிப்போகும்...
காரிகைகவரா கரும்புகையை வேடம்கட்டி வெளிராய்காட்டும்
தூரிகையின்றி அரும்புஉதடுகள் வடிவமில்லா ஓவியம்வரையும்...