வளர்ந்த நாட்டு மகிழ்ச்சியில
வானம் பார்த்து கைய நீட்டு
வான விமானம் கட்டு சோறு தரும்
வானம் பார்த்து வாய காட்டு
மேக விமானம் நீர விட்டு தரும்
சாலை விமானம் ஏறி விளையாடு
காலை ஆடுகளம் விமானதளம்
ஓடி வரும் குட்டி விமானம்
ரொட்டி துண்டு கொண்டு தரும்
பட்டி தொட்டியெல்லாம் வளர்ச்சி
வட்டி பணம் கூட்டி மகிழ்ச்சி
தொட்டி செடிகளில் பிளாஸ்டிக் மலர்ச்சி
மண் மேல காங்கிரீட் முடைச்சி
ஆகாய தாமரை பூத்த குளத்துல
ஆண்டாண்டு விளைச்சல் தந்த பூமியில
ஆகாய விமானம் வருகுதையா
அழிஞ்ச குமரிகண்ட துண்டுல மீதி
குமரியில குமாரியும் குலமும் வாழ .
முடியாம போகுதையா..!
உனக்கென்ன கவல
வளர்ந்த நாட்டு மகிழ்ச்சியில
வந்த கவல விட்டு தள்ளு
வல்லரசு நாட்டு வளர்ச்சிகள
வாயரப் பேசி பேசி
பிளாஸ்டிக் மாரத் தட்டிக் கொள்ளு..!