அதிகாரத் திமிரு

அதிகாரத்திமிரு ஆணவ குரைப்பு
அடங்காத ஆத்திரம் வருது உன்னால
கடிகார முள்ளு கண்ணோர கொம்பு
அடங்காத சாத்தானா ஆயாச்சு தன்னால
போட்ட ஓட்ட திரும்ப தா
தப்பித்துக் கொண்டு பிழைக்க
தாய் மொழியும் தாய் நிலமும் ஆழ
தாயில்லாம பொறந்தவனுக்கு

- அதிகாரத் திமிரு

சோற தின்ன எங்கள
மண்ண தின்ன வச்ச
மண்ண வித்து எங்கள
சோத்துக்குப் போராட வச்ச
உழுது அறுத்த வயலுல
எண்ணெய் எடுக்க நுழைஞ்ச
தேக்கி வச்ச நீரெல்லாம்
கொப்பனுக்கா கொடுத்த
தமிழ் நாட்டு நிலத்த எல்லாம்
தாரை வார்த்துக் கொடுத்த
தலைவிய கொன்னு
விஞ்ஞானிய கொன்னு
அதிகாரம் புடிச்சி ஆழ
அந் நியனுக்கு பொறந்த - உன்
- அதிகாரத் திமிரு

அணு உலை வச்சி
அழிக்க நினைச்ச பாவி
துறைமுகம் கட்டி
சூறையாடப் போற கள்ளா
நாட்டு வளத்த
வெளியானுக்கு கொடுக்கிற துரோகி
மக்களுக்கு வரிய போட்டு
அவனுக்கு விமானம் வாங்கும் கேடி
இந்தியக்காரன் எல்லாம் கடங்காரனா ஆக்கி ஆழ
இரவலுக்கு வந்த உன்

- அதிகாரத் திமிரு

எழுதியவர் : செ.பா. சிவராசன் (27-Dec-17, 10:23 pm)
சேர்த்தது : செ.பா.சிவராசன்
பார்வை : 144

மேலே