பார்வையில் கதைத்து கொண்டேன்
பேருந்து எத்தனித்தும்
செல்லவில்லை
அதில் அவன் இல்லை
நிறுத்த பலகையின்
நிழல் என் சொந்தம்
நீ வரும்வரை மட்டும்
இரண்டொரு பேச்சுக்காக
காத்திருக்கிறேன்
என் தோழியர்களையும்
மறந்து
பயணமும் பாதையும்
ஒன்றுதான்
பழக மறந்தேன்
பார்வையில்
கதைத்து கொண்டதால் ......