ஒரு வழிப்பாதை பயணம்
பகிரப் பகிரவே அன்பு வளர்ந்திடும்
பகிரப் பகிரவே துன்பம் குறைந்திடும்
பகிரப் பகிரவே மகிழ்ச்சி பெருகிடும்
பகிரப் பகிரவே துக்கம் ஓடிடும்
உள்ளே நெஞ்சில் அடக்கி வைக்க
மெல்ல நம்மை ஆளப் பார்க்கும்
சேர்ந்து வாழத் தானே வந்தோம்
தனித்து வாழ்ந்து கிடைப்பது என்ன?
ஒரு வழிப் பாதையென நினைத்து
மனதிற்குள் எல்லாம் தினம் அடைக்க
வாழ்வே துன்பம் கொண்டது ஆகும்
நாளும் பொழுதும் சோர்வே சேரும்
சேர்ந்து பகிர்ந்து மகிழ்ந்து வாழ
வியந்து துடித்து வலிகள் மறையும்
தனிப் பாதை ஒன்று அமைத்தால்
முட்கள் கிடக்கும் நம்மை முடக்கும்