ஜாய்ஸ் கிர்ப்பி ஏஞ்சல் - சி ,எம் ,ஜேசு

வாழ்த்துக்கள் மகளே
வருங்காலம் உனதாகட்டும்

நீ உதைத்த உதையினால்
நான் எழுந்து மகிழ்ந்து இயக்கமானேன்

நீ உதிர்த்த வார்த்தையினால்
நான் உலகில் உயர்ந்த மரமானேன்

நின் சிரித்த முகத்தினால்
நான் சிறகு முளைத்த பறவையானேன்

உன் இனிய வளர்வின்
அசைவுகளெல்லாம் எனக்கு இசையானது

உன்னை கல்விக்கூடத்திற்கு
அழைத்து செல்வதே எனக்கு தொழிலானது

தோற்றத்தால் நீ எனக்கு அன்னை
ஏற்றதால் எனக்கு நீ உயிரின் மூச்சு

உன் திறன்கள் அனைத்தும்
உலகிற்கு ஒளியினை கொணர்ந்திடட்டும்

உன் ஆற்றல் அனைத்தும்
உலகம் போற்றத்தக்கதாய் அமைந்திடட்டும்

பாரதம் வந்த மகளே
பார்கவி பாரதி கண்ட கனவே

பெண்ணெனும் பெரும் பேற்றை
நீ அடைந்ததால் நின் பொற்பாதம் வணங்கி நான்

மகிழ்ச்சி கவி படைக்கிறேன்

வாழ்த்துக்கள் மகளே
வருங்காலம் உனதாகட்டும்

வலி நிறைந்த உன் வாழ்வு
ஒளி நிறைந்து உலகில் பரவட்டும்

வளைந்து ஓடும் ஆறாய் பெருக்கெடுத்து
தெளிந்த நீரோடையாய் உலகை மாற்றுவாய்

நீ இருக்கும் உலகத்தில் இயக்கமாகி
நற்சேவைகளின் துவக்கமாகி தூய நெறி படைப்பாய்

வாழ்த்துக்கள்; பதிக்கிறேன் என்
இனிய எண்ணங்களினால் இதய லய ஓட்டத்தால்

என்றென்றும்
உன் மகிழ்வில் உன் உள்ளம் இணைந்த உன் இல்லம்

எழுதியவர் : சி .எம் .ஜேசு பிரகாஷ் (29-Dec-17, 10:12 pm)
பார்வை : 57

மேலே