புத்தகம்

புத்தகமே நீ என்ன
காகித குடத்தில் ஊற்றப்பட்ட
தங்கநீரா அரையானாலும்
நிறையானாலும் அலம்புவதே இல்லையே...

புத்தகமே நீயொரு
மிகச்சிறந்த
நிலை கண்ணாடி
முகத்தை மட்டும்
காட்டுவதில்லை
அகத்தையும் காட்டுகிறாய்
உன்னை பார்ப்பவர்கள் எல்லாம்
அதில் தன்னையும் காண்கிறார்கள்...

புத்தகமே நீயொரு
சாகாவரம் பெற்ற பிள்ளை
உன் தாயும் தந்தையும்
அழிந்தாலும் நீ அழிவதேயில்லை...

புத்தகமே நீயொரு
சமத்துவத்தை போதிக்கும் ஞானி
நீ ஆத்திகனாக நாத்திகனாக
பகுத்தறிவாளனாக உள்ளாய்
உன் முகவரியால் தான்
நான் என் முகவரியை
காண்கிறேன்...

இன்னல் பல தாங்கி
பத்து மாதம் சுமந்தால்
ஒரு குழந்தை பிரசவமாகிறது
உன்னை என் நெஞ்சில்
சுமக்கிறேன் பல்லாண்டுகளாய் இன்னும் உன்னை பிரசவிக்க முடியவில்லை...

புத்தகமே உனை முதலில்
தோளில் சுமந்தேன்
முதுகில் சுமந்தேன்
இதயத்திலும் சுமக்கிறேன்
நீ சுமையல்ல சுகம்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (30-Dec-17, 6:04 am)
Tanglish : puththagam
பார்வை : 779

மேலே