பெண்ணங்கே
தமிழொளி வீசும் மஞ்ச மலரன்ன
தரணியில் பைங்கால்கள் மெல்ல மிதந்தன
வரமென வந்த கரமீர முகிலன்ன
அழகில் மிஞ்சும் தமிழ்
நகர மருங்கிலும் நின்னடை யோடு
சகிதமாய் வரும்வழி முழுதும் நெகிழும்
சிகர மகண்ட தோளுடை மெய்யன்
நெகிழ்ந்து குறுகினன் புழுகன்
நீயும் நானும் நிறைந்து செல்வோம்
தீயும் காதலும் நிறைந்து போகும்
சாயும் வாழ்வும் சீர்மிகு நிலயம்
நீயும் நானும் ஓன்றும்
நின்னழகில் மயங்கிய நானும் நாண
நிந்தமிழால் இரங்கிய நானும் ஈவ
நின்னடையால் நானும் வழக்கு வாழ்வேன்
என்னைக் காதல் செய்க
கண்ணிரு செவிமலர் சேரும் கண்ணம்
கொண்ட வண்ணமிகு தொகுதி பேரழகு
அண்டம் ஐந்தில் மடங்கும் அதுபோல்
பண்டையனும் உன்னில் அடங்கன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
