பச்சை வயல் பாதையிலே
பசுமைதான்-
பச்சை வயல்வெளியும்,
பள்ளித் தோழியுடன்
சாலையில்
பலகதை பேசி
நடைபயின்ற நினைவுகளும்..
இன்று-
சாலையோர வயலெல்லாம்
வீடாகி,
பசுமையழகு பாழானது..
பிரிந்த தோழிகள்
பிரச்சனைகள் பலவற்றுடன்
வெளியூரில்..
திரும்புமா
பசுமைக் கா(கோ)லங்கள்...!