மழலைப் புத்தகங்கள்

மழலைப் புத்தகங்கள்

விரிந்து கிடக்கின்றன...
மனிதர்கள்
கற்பதற்கும்
கற்பிப்பதற்கும்-
மழலை எனும்
புத்தகங்கள்.

தாயின் தழுவலில்
தவழ்ந்து மகிழ்ந்ததை
தமது
செல்லங்களுடன்
தழுவித்
தாயாக வேண்டும்
என எந்தப் பல்கலைக்கழகங்கள்
பயிற்றுவித்தன?

தான் பெற்ற
இன்பத்தை பெறுக இவ்வையகம்
என
வேதங்களுக்கே
கற்றுத் தருகின்றனர்
இந்த
இளம் விற்பன்னர்கள்.

பின்னால்
நிகழும்
ஈருடல் ஓர் இதயக்
கோட்பாடுகளை
முன்னால்
நிகழ்த்துகின்றன
மழலைகள்...
ஓர் உடை
ஈர் இதயங்கள் என.

இளம் கன்றுகள்
பயமறியாது என்பது
உண்மை.
இல்லாவிட்டால்
சீறுபவைகளை
சிறு இடைவெளியில்
அமர்த்தி
அழகு
பார்க்குமா
பிஞ்சுகள்?

- எழில்

28 12 2017

எழுதியவர் : சாமி எழிலன் (30-Dec-17, 11:06 am)
சேர்த்தது : Saami Ezhilan
பார்வை : 64

மேலே