மௌனம்
மொழிகள் பல கற்றறிந்தேன் பள்ளியில்..
காதலி எவ்வூரானாலும் பேசலாம் என்ற களிப்பில்..
கண்டேண் உனை ஒரு நாள்
கோபுர வாசலில்!
கற்ற மொழியும் மறைந்தது மனதில்
ஐயகோ! என்ன செய்வேன்,
என்ற பயத்தில்..
நோக்கினேன் உனை
விழி வாசலில்..
என்ன விந்தை!
மையலில்..
நாம் பேசியது
அன்று கண்களில்..
மலர் அம்பின் தாக்கலில்..
'மௌனம்' எனும்
புது மொழியில்!!