கானல் நீர்
அலையாய் நீ தழுவுவாய் என்றால்
கரையாய் நான் காத்திருப்பேன்..
தென்றலாய் நீ தீண்டுவாய் என்றால்
மலராகி நான் காத்திருப்பேன்..
மேகமாய் வந்து அணைப்பாய் என்றால்
மலையாகி நான் காத்திருப்பேன்..
காத்திருக்கும் காலம் இயற்கைபோல் என்றால்
காதல் என்றும் கானல்நீரே...