சிறப்பேலோ ரெம்பாவாய்

குன்றைக் குடையெனக் கொண்டானைக், கம்சனைக்
கொன்றானைக், கோகுலத்தில் கோபியர் உள்ளமதை
வென்றானைக், கையிலள்ளி வெண்ணெயுண் டானை,மண்
தின்றானை, எண்ணிலாச் சேட்டைகள் செய்தானைக்
கன்றுகள் காதினில் கட்டெறும்பு விட்டானை
அன்னை யசோதையின் அன்பிற் குகந்தானை
நன்மொழி செப்பிய நல்லழகு நாயகனைச்
சென்று தொழுதல் சிறப்பேலோ ரெம்பாவாய் !