அடக்கி வைக்கப்பட்ட கண்ணீர்த் துளிகள்
என் காதலனுக்கு
என் மீதுள்ள காதல் குறைவு என்று
தெரிய வருகின்ற போது
கண்ணீரை தடுக்கவும் முடிவதில்லையே....
கண்ணீர் சிந்துவதொன்றும் எனக்கு புதுமையில்லைதான் இருப்பினும்
புது வருடத்தின் முதல் திகதியல்லவா
என் காதலன் காயப்படுத்தியதால் கண்ணீர் சிந்தக்கூடாது என்று
கண்ணீர்த் துளிகளையெல்லாம்
கண்களுக்குள்ளேயே அடக்கிக் கொண்ணடிருக்கிறேன்.....