புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2018

#இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2018

உண்மைக்கும் நேர்மைக்கும்
உருவங்கள் கொடுப்போம்
பொய்மைதனை சிதைத்து - தர்ம
சிலையொன்றை வடிப்போம்..!

சில்லறை புத்தியில்
செல்லரிக்கும் நாடு - அதை
அழிக்கும் மருந்தினை
தெளிக்க படு பாடு..!

ஊறுகள் நேராத
பாரொன்றை அமைப்போம்
ஒற்றுமை கை கொண்டு
வெற்றிகள் சமைப்போம்..!

புத்தாண்டு பிறந்தது
நன்மைகள் வளர்க்க
புன்னகை பூ மலர்ந்து
வாழ்க்கையும் மணக்க..!

வாழ்த்துக்களுடன்,
#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (1-Jan-18, 6:39 pm)
பார்வை : 3061

மேலே