உறவுகள்
எத்தனை உறவுகள்
வாழும் போது வாழ்த்தும் உறவுகள்
சாகும் போது மனதார கண்ணீர் விடும் உறவுகள்
செல்வம் சேர்ந்தால் போற்றும் உறவுகள்
செல்வம் அழிந்தால் காணத உறவுகள்
வெற்றி பெற்றால் கொண்டாடும் உறவுகள்
தோல்வியுற்றால் மறைந்து எள்ளி நகையாடும் உறவுகள்
கண்ணீர் விடுகையிலே நம்மை தேற்றும் உறவுகள்
மகிழ்ச்சி கொண்டால் நம்மோடு சேர்ந்து மகிழ்ச்சி கொள்ளும் உறவுகள்
தள்ளாடி விழுகையிலே தோல் கொடுக்கும் உறவுகள்
பசியோடு துடிக்கையிலே உண்ண அன்னம் படைக்கும் உறவுகள்
களியோடு கலியையும் சேர்க்கும் உறவுகள்
மனதால் கவலை படுத்தும் உறவுகள்
உடலில் உள்ள காயங்களில் ஈட்டி பாய்ச்சும் உறவுகள்
பொறாமை கொள்ளும் உறவுகள்
கபடமில்லா வாழ்த்தும் உறவுகள்
எத்தனை எத்தனை உறவுகள் நம்மை கடக்கையிலே
புறத்தே நம்பி
அகத்தே மறந்து
எது உண்மை என்று புரியாமல்
வாழ்கின்றோம் அறவாழ்க்கை.