மழையை காதல்செய்

மனிதனுக்காக
இறைவன் எழுதிய
இயற்க்கை கவிதை
மழை....

ஆண்டவன் அள்ளித்தூவும்
ஆசிர்வாதமலர் மழை...

மனிதன் உயிர் வாழவும்
மண்ணில் பயிர்வாழவும்
தன்னை தருவது மழை....

குடையை இடைமறித்து
மழையை மறிக்காதீர்

குடையிருந்தும் நனையும்
குழந்தைகளுக்குதான் தெரியும்
மழையின் மகிமை

மீண்டும் ஒருமுறை
குழந்தையாக வேண்டுமா ?

கொட்டும் மழையில்
கொஞ்சம் நனையுங்கள்

வான்நோக்கி வாய்திறந்து
மழைநீர் குடியுங்கள்

சன்னல் திறந்துவைத்து
சாரலை அழையுங்கள்

அலைபேசி அணைத்துவிட்டு
மழையுடன் பேசுங்கள்

மழைதரும் மெட்டுக்கு
இயன்றவரை இசையமையுங்கள்

மாடிவீட்டு மகான்களே
குடிசைவீட்டு குழந்தைகளாகுங்கள்
மழையின் அழகினை
அப்போதுதான் அறிவீர்கள்

ஆறு வயதோ ?
அறுபது வயதோ ?

இயன்றவரை மழையை
இன்றே காதலியுங்கள்

மருத்துவரின் அறிவுரையெல்லாம்
மறுநாள் பார்த்துக்கொள்வோம்....

எழுதியவர் : பெ வீரா (1-Jan-18, 9:57 pm)
சேர்த்தது : பெ வீரா
பார்வை : 405

மேலே