சட்டம் யார்கையில்

சட்டம் யார் கையில்
ஜல்லிகட்டு நடந்தாகவேண்டும் என்று எழுதிய கைகளுக்கு
விவசாயம் செய்தே ஆகவேண்டும் என்று ஏனோ எழுதவில்லை
ஏழை பணக்காரன் வித்தியாசம் சட்டத்தின் முன் இல்லை என்று எழுத பட்ட கைகளுக்கு
ஒருவன் மட்டும் மதிப்போடு இருப்பதை ஏனோ எழுதவில்லை
விலை மாது என்று முத்திரை குத்தி தண்டனை தரணும் கைகளுக்கு
அவளை அந்நிலைக்கு தள்ளிய வறுமையை தடுக்க ஏனோ மறந்து விட்டது
சட்டம் தன் கடமையை செய்யும் என்று எழுதிய கைகளுக்கு
கடமை தவறும் நபரை ஏனோ தண்டிக்க மறுக்கிறது
இதெல்லாம் தெரிந்தவளாக தான் அந்த தேவதையும் கண்களை கட்டிக்கொண்டு
சட்டம் யார் கையில் உள்ளதோ என்று நிற்கின்றாளோ

எழுதியவர் : டேவிட் ஸ்ரீ (2-Jan-18, 3:21 pm)
பார்வை : 127

மேலே