பூனை குட்டி போல் ஒரு வாழ்கை

எங்கிருந்தோ எப்படியோ
யாருக்கும் தெரியாமல் கண்டெடுத்த
பொக்கிஷம் நீ

நீ வந்ததில் இருந்து ஓடுவதும் இல்லை
உட்காருவதும் இல்லை
ஓடினாள் பின்னால் நீ!
உட்கார்ந்தாள் மடியில் நீ!

யோசனை பல செய்து பார்த்து
தம்பியோடு கலந்துரையாடி
கூண்டு ஒன்று வாங்கி வந்தோம்
உன்னை அதிலே அடைத்துவிட்டு
இனி நிம்மதி என்றே பெருமூச்சோடு உறங்கிபோனோம்!

விடியும் முன்னே வயிற்றின் மேலொரு
கனமாய் தோன்ற மெல்ல கண்கள் விழித்து பார்த்தேன்
முன்னங்காலை மடக்கி வைத்து
களைப்பு நீங்க உறங்கி கிடந்தாய்

ஓடி சென்று கூண்டை பார்த்தேன்
ஓட்டை பெரிதாய் இட்டிருந்தாய்
அதன் அடையாள குறியாய்
உன் நெற்றியில் காயம் பெற்றிருந்தாய்!!

உன்னை போல் ஒரு துணிவு வேண்டும்
வென்று காட்டும் வலிவு வேண்டும்
தடைகளை தகர்த்திடும் துணிவு வேண்டும்
நானும் ஒரு நாள் களைப்பு நீங்க உறங்க வேண்டும்....!

எழுதியவர் : வெண்ணிலாபாரதி (2-Jan-18, 4:20 pm)
பார்வை : 895

மேலே