மன விஷம் நீங்க

காட்டில் தனித்துவிடப்பட்ட மானாய் கையில் நெருப்புடன் திரிகிறேன் பயமின்றி.

துப்பாக்கிகள் என்னைக் குறி வைக்கட்டும்.
ஏன் சுட்டுத் தள்ளத் தொடங்கட்டும்?
மரிப்பதோ இவ்வுடல்!...
மீண்டும் புகுந்து வருவேனே மறு உடல்!...

நல்லுணவைச் சமைத்து நடுவில் கொஞ்சம் விஷத்தை ஊற்றிவிட்டு சாப்பிடுங்கள் என்கிறீர்கள்..
விஷந்தான் என்ன செய்யும்?
மனித மனதில் உள்ள விஷத்தை விடக் கொடியதா இந்த உணவில் கலந்துள்ள விஷம்?...

பாம்பின் பல்விஷம் இருவரைக் கொன்றிருக்கலாம்.
ஆனால், இந்த மனிதனின் மன விஷமோ கோடிக்கணக்கில் கொன்று குவிக்கிறதே!

மனதில் விஷத்தை வைத்துக் கொண்டு,
அதில் காகிதத்தை அரசனாக்கி, அதற்காக எதையும் செய்யும் பிண்டங்களுக்குள் வாழ்வதைவிட ஒரு கட்டு விறகில் வெந்துட்டு பொய்விடலாம்...

இந்நிலை மாற உண்மைப் பரம்பொருளே,
அருள்வாய் எனக்கு...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (6-Jan-18, 7:45 am)
Tanglish : mana visham nenga
பார்வை : 573

மேலே