கல்லூாி நினைவுகள்

மிதமான இளவேனில் நேரம்
தடுமாறும் சிறுதுள்ளி தூக்கம்
கலைந்தாடும் புள்ளிமான் கோலம்
கரைசேரும் நட்பெனும் கூடம்
துதிபாடும் இனிய துவக்கம்
குருகேள்கும் காலை வணக்கம்
இசைமீட்டும் தேடும் பக்கம்
காற்றில் தொலையும் காகித நடனம்
மனம் தேடும் அணிலாட்டம்
ஜன்னலோரம் நடக்கும் குதூகலாட்டம்
கதைகள் உரைக்கும் நரிக்கூட்டம்
கவலையில் எழுதும் ரோஜா கூட்டம்
பகல் பொழுதின் உணவோட்டம்
தினம் தேடும் புது இலைகேட்டும்
தேடிகிடைக்கும் புது சுவையாட்டம்
நெஞ்சம் முழுதும் குளிர்ச்சியூட்டும்
அமைதி நிலவும் மாலைநேரம்
மயக்கம் கொள்ளும் கதவோரம்
கரைந்தோடும் சிறு நாளிகைத் தூரம்
கல்லூாி நினைவுகள் என்றும் நம் கண்ணோரம்........
- சஜு