இளமை பருவம்
பருவம் செய்யும் பாவம்-அதனால்
பாதை கொஞ்சம் மாறும்
நெஞ்சில் ஏதோ ஏக்கம்-அது
பெண்ணை பார்க்க தூண்டும்
கல்வி கற்கும் பருவம்-ஆனால்
காதல் கற்க துடிக்கும்
சிநேகம் ஒன்று சொல்லும்-உடனே
சிந்தனை அங்கு செல்லும்
கையில் காசு விளையாடும்-ஆதலால்
கைபேசி அதிகம் உரையாடும்
கல்வியில் காலம் கரையும்-ஏனெனில்
புத்தகம் பையில் தூங்கும்
உடையில் அழகு கூடும்-இருப்பினும்
உள்ளம் அழுக்காய் மாறும்
புது சொந்தம் சேர்த்து கொள்ளும்
இருந்தசொந்தம் மறந்து போகும்
கல்லை பார்த்தும் காதல் வரும்
கண்ணீரும் சேர்ந்து வரும்
இளமை ஓடி போகும் -பின்பு
பாரம் வந்து நெஞ்சில் சேரும்
பருக்கள் முகத்தை மறைத்தாலும்
பெற்றோர் பாசத்தை மறக்காதே...
மீசை முடி முளைத்தாலும்
குரங்கின் ஆசை வைக்காதே...
பெண்ணின் முகம் பார்த்தாலும்
ஆண்மையில் ஆணவம் கொள்ளாதே..