அப்பா

தாயின்மடி நானிருக்க
தவமிருந்து காத்து நின்றாய்
ஆறடி மனிதனான நீ
அறையடி என்னை எடுக்க பயந்தாய்
தவறிவிழுவேன் என்றோ
தவிடு பொடி படும் என்றோ
அரையிலிருந்த என்னை
தரையிறக்கி நடக்க வைத்தாய்
உன் கை பிடித்து
பின் தொடர்ந்தேன்
உறவுகளை வளர்க்கச் சொன்னாய்
உணர்வுகளை அடக்கச் சொன்னாய்
முதியோரை மதிக்கச் சொன்னாய்
மதியாதோரை மறக்கச் சொன்னாய்
என் வாழ்க்கை எனும் சக்கரத்தில்
அச்சாணியாய் என்றுமே
உச்சாணியில் நிற்கும்
என் உதிரத்தின் மூலமே
அப்பா......
உன் உன்னதத்தை அறிய
தந்தையில்லா தனயனிடம் கேள்
நான் என்ன சொல்லிவிட்டேன்
பெரிதாக.....
......தயா....✍

எழுதியவர் : உலையூர் தயா (9-Jan-18, 12:28 am)
Tanglish : appa
பார்வை : 1236

மேலே